ஹோம் /நியூஸ் /உலகம் /

அமெரிக்காவில் எலும்பை உறைய வைக்கும் குளிர்.. சமாளிக்க முடியாமல் 22 பேர் பலி!

அமெரிக்காவில் எலும்பை உறைய வைக்கும் குளிர்.. சமாளிக்க முடியாமல் 22 பேர் பலி!

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு

கடும் பனியுடன் மணிக்கு 65 மைல் வேகத்தில் காற்றும் வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • internatiojnal, India

அமெரிக்காவில் வீசும் பனிப்புயலால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது. குறிப்பாக நியூயார்க்கின் buffalo பகுதியில் மட்டும் 2 அடி உயரத்துக்கு பனி தேங்கிக்கிடக்கிறது. எலும்பை உறைய வைக்கும் குளிரை சமாளிக்க முடியாமல் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் பனியுடன் மணிக்கு 65 மைல் வேகத்தில் காற்றும் வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: சிறையிலிருந்து விடுதலை... தாய் நாட்டிற்கு திரும்பிய ’பிகினி’ கொலையாளி சார்லஸ் சோப்ராஜ்!

 கார்கள் செயலிழப்பு, தொடர் விபத்துகளோடு மின்சாரமின்றியும் மக்கள் தவித்து வருகின்றனர். மொத்தம் 3 லட்சத்து 15 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் வீடுகளில் குளிரால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

First published:

Tags: America, Snowfall, USA