அமெரிக்காவில் கனமழை.. வெள்ளை மாளிகையை வெள்ளம் சூழ்ந்தது!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேற்று காலை கனமழை பெய்தது. ஒரு மாதத்திற்கு பெய்ய வேண்டிய மழை ஒரு மணி நேரத்திலேயே கொட்டித் தீர்த்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அமெரிக்காவில் கனமழை.. வெள்ளை மாளிகையை வெள்ளம் சூழ்ந்தது!
அமெரிக்காவில் மழை - வெள்ளம்
  • Share this:
வாஷிங்டனில் பெய்த கனமழையால் வெள்ளை மாளிகையில் வெள்ளம் சூழந்துள்ளது .

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேற்று காலை கனமழை பெய்தது. ஒரு மாதத்திற்கு பெய்ய வேண்டிய மழை ஒரு மணி நேரத்திலேயே கொட்டித் தீர்த்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சாலைகளில் திடீரென காட்டாறு போல பாய்ந்த வெள்ளத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். 6 புள்ளி 3 அங்குலம் அளவுக்கு பெய்த கனமழை காரணமாக, சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முடங்கியது. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டதுடன், குடியிருப்புப் பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்தது. வெள்ளப்பெருக்கின் பாதிப்பு வெள்ளை மாளிகையையும் விட்டு வைக்கவில்லை.

வெள்ளை மாளிகையின் தரைகீழ் தளத்தில் மழைநீர் புகுந்தது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சில இடங்களில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்கள் மோட்டார் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நீரிறைக்கும் எந்திரங்கள் மூலம் நீரை வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

First published: July 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading