முகப்பு /செய்தி /உலகம் / தொடர் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் கலிபோர்னியா.. மின் இணைப்பு துண்டிப்பால் தவிக்கும் மக்கள்..

தொடர் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் கலிபோர்னியா.. மின் இணைப்பு துண்டிப்பால் தவிக்கும் மக்கள்..

தொடர் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் கலிபோர்னியா

தொடர் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் கலிபோர்னியா

California Flood : கலிபோர்னியாவில் தொடர் கனமழையால் வீடுகள், கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • internatio, Indiacalifornia

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனால் நகரில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தெற்கு சான் ஃப்ரான்சிஸ்கோ, ஸ்பிரிங்வில்லி, பஜாரோ, சாண்டா குரூஸ் ஆகிய பகுதிகளில் வீடுகள், கட்டடங்கள் உள்ளிட்டவை இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு தண்ணீரில் மூழ்கியுள்ளன.

மேலும், முக்கிய சாலைகள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. தொடர்ந்து, மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை சாய்ந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் இருந்தவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்கன மழை வெள்ளத்தால் கலிபோர்னியா மக்கள் அவதியடைந்துள்ளனர்.

First published:

Tags: California, Disasters, Flood, Tamil News, Weather News in Tamil