ஹோம் /நியூஸ் /உலகம் /

வெள்ளத்தில் மிதக்கும் பிரேசில்.. நிலச்சரிவுகளால் சில மாநிலங்களுக்கு அபாய நிலை பிரகடனம்!

வெள்ளத்தில் மிதக்கும் பிரேசில்.. நிலச்சரிவுகளால் சில மாநிலங்களுக்கு அபாய நிலை பிரகடனம்!

வெள்ளம்

வெள்ளம்

பரானா, சாண்டா கேடரினா மற்றும் ரியோ கிராண்டே டோ சுல் ஆகிய இடங்களை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாய நிலை என்று குறிப்பிடும் சிவப்பு எச்சரிக்கை பகுதியாக அறிவித்துள்ளனர்,

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பிரேசிலின் தெற்கு மாநிலமான சான்டா கேடரினாவில் கனமழை பெய்து ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

தென்னமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் பாரானா மற்றும் சாண்டா கேடரன் உள்பட பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகள் வீடுகள் எல்லாம் நீரில் மூழ்கி ஊரே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

வீட்டில் கீழ்தளம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டின் மாடியில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் இருந்து மக்களை காப்பாற்ற சாண்டா கேடரினாவில் உள்ள மீட்புக் குழுக்கள் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி மக்களை மீது வருகின்றனர். அதே போல் சிறிய ரக மிதவைகள், கப்பல்கள் கொண்டு அத்தியாவசிய பொருட்களையும் விநியோகித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : அமெரிக்க அதிபருக்கு கொலை மிரட்டல் கடிதம் - 33 மாத சிறை தண்டனை பெற்ற நபர்!

சாண்டா கத்தரினாவில், கனமழை காரணமாக இதுவரை சுமார் 882 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். G1 என்ற செய்தி இணையதளத்தின்படி, தென்கிழக்கு மாநிலமான எஸ்பிரிட்டோ சாண்டோவில் மழையால் ஒரு மரணம் மற்றும் 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகள் தெற்கு மாநிலங்களான பரானா, சாண்டா கேடரினா மற்றும் ரியோ கிராண்டே டோ சுல் ஆகிய இடங்களை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாய நிலை என்று குறிப்பிடும் சிவப்பு எச்சரிக்கை பகுதியாக அறிவித்துள்ளனர்,

பிரேசிலின் 26 மாநிலங்களில் 23 மாநிலங்களும் ஆரஞ்சு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. அதோடு அதிகம் பாதிக்கப்பட்ட 17 நகரங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

திங்களன்று, கனமழை காரணமாக குவாரதுபா நகராட்சிக்கு அருகில் BR-376 நெடுஞ்சாலையில் இரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். அந்த நெடுஞ்சாலை வழியாக பயணித்த 30 க்கும் மேற்பட்டோர் வண்டியோடு அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Brazil, Flood