காபூல் விமானநிலையத்தில் காத்துகிடக்கும் பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை அமெரிக்கவீரர்களிடம் ஒப்படைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் 20 வருடங்களுக்கு பின் மீண்டும் தாலிபான்கள் வசம் சென்றுள்ளது. இது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தாலிபான்களின் கொடிய ஆட்சியின் கீழ் வாழ முடியாது என்பதால் ஆப்கான் மக்கள் காபூல் விமானநிலையத்தில் காத்துகிடக்கின்றனர்.
தாலிபான்கள் வருகிறார்கள் தயவு செய்து எங்களை காப்பாற்றுங்கள் என காபூலில் இருக்கும் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி பெண்கள் கண்ணீருடன் கேட்கும் காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
காபூல் விமானநிலையத்தில் காத்திருந்த போது சிறுமி ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுமியின் உடலை அவரது தந்தை கட்டியணைந்தவாறு தூக்கிச்செல்லும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காபூல் விமான நிலையத்தில் காத்திருந்த ஒரு பெண் தனது கைக்குழந்தையை அமெரிக்க பாதுகாப்பு படை வீரரிடம் ஒப்படைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கட்டும் என எண்ணி யாரென்று தெரியாத ஒரு அமெரிக்க படைவீரரிடம் குழந்தையை ஒப்படைக்கிறார் அந்தப்பெண்.. ஆப்கானின் சூழலில் எப்படி இருக்கிறது என புரிந்துக்கொள்ளுங்கள் என பதிவிட்டு இந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
Can't get over this image - imagine the level of desperation where parents hand their babies to complete strangers to ensure their safety and future #AfghanChildrenpic.twitter.com/rBma0TGkIz
கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமி ஒருவரை அவரது தாய் அமெரிக்க படைகளிடம் கொடுக்கும் காட்சி இணையத்தில் வெளியானது. அந்த சிறுமி ஆப்கானிஸ்தான் விமானநிலையத்தில் இருக்கும் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.