முகப்பு /செய்தி /உலகம் / சல்மான் ருஷ்திக்கு ஆதரவு.. புகழ்பெற்ற எழுத்தாளர் ஜேகே ரவுலிங்கிற்கு கொலை மிரட்டல்

சல்மான் ருஷ்திக்கு ஆதரவு.. புகழ்பெற்ற எழுத்தாளர் ஜேகே ரவுலிங்கிற்கு கொலை மிரட்டல்

ஜேகே ரவுலிங்கிற்கு கொலை மிரட்டல்

ஜேகே ரவுலிங்கிற்கு கொலை மிரட்டல்

சல்மான் ருஷ்திக்கு ஆதரவு அளிக்கும் விதமாக ட்வீட் செய்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஜேகே ரவுலிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி கத்திக்குத்துக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கருத்தரங்கு ஒன்றில் சல்மான் ருஷ்தி பங்கேற்ற போது, அவரை 24 வயதான ஹாதி மாடார் என்ற இளைஞர் கத்திக்குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தினார். அந்த நபரை உடனடியாக காவல்துறை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

கொலைவெறி தாக்குதலால் சரிந்து கீழே விழுந்த சல்மான் ருஷ்தியை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தாக்குதலில் கல்லீரல் மீக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளதாகவும், இந்த தாக்குதல் காரணமாக அவர் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நேற்று வரை, அவர் வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த நிலையில் தற்போது அவருக்கு நினைவு திரும்பி உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காஷ்மீரி முஸ்லீமான எழுத்தாளர் சல்மான் ருஷ்தி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர். 1988ஆம் ஆண்டில் அவர் எழுதிய சாத்தானின் வேதங்கள் என்ற புத்தகம் உலக அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக இந்த புத்தகம் இருப்பதாக கூறி ஈரான் உள்ளிட்ட நாடுகள் சல்மான் ருஷ்திக்கு பட்வா எனப்படும் மரண தண்டனை விதித்தது. இதையடுத்து இந்தியாவை விட்டு வெளியேறி 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார் சல்மான் ருஷ்தி. சல்மான் ருஷ்தி மீதான இந்த கொலைவெறி தாக்குதலுக்கு அவரின் எழுத்துக்களும், கருத்துக்களுமே காரணம் எனக் கூறப்படுகிறது. சல்மான் ருஷ்திக்கு எதிரான தாக்குதலுக்கு உலக தலைவர்கள், பிரபலங்கள், எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உலகின் மிக பிரபலமான எழுத்தாளரான ஹரி பாட்டர் நாவல் தொடரை எழுதிய ஜேகே ரவுலிங், சல்மான் ருஷ்தி மீதான தாக்குதலுக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வேறு பெண்ணுடன் தொடர்பு... காதலனை பழிவாங்க முழு பக்க விளம்பரம் தந்த பெண்

75 வயதான ரவுலிங் சல்மான் ருஷ்தி விரைவில் குணமடைய வேண்டும் என பதிவில் தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு பின்னூட்டமாக ஒரு நபர் ஜேகே ரவுலிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பதில் அனுப்பியுள்ளார். சல்மான் ருஷ்தியை கொலை செய்ய முயன்ற நபரை ஒரு புரட்சிகர போராளி என புகழ்ந்துள்ள அந்த நபர், கவலைப்படாதீர்கள் அடுத்த குறி நீங்கள் தான் என மிரட்டியுள்ளார்.

இந்த பதிலை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜேகே ரவுலிங், ட்விட்டர் நிறுவனத்தை டேக் செய்து தனக்கு மிரட்டல் விடுத்த நபரின் கணக்கு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த மிரட்டல் பதிவு தொடர்பாக காவல்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

First published:

Tags: Murder case, NewYork, Stabbed