Home /News /international /

டெல்டா வேரியன்டை மீண்டும் மனிதர்களுக்கு பரப்பும் ஹாம்ஸ்டர்கள்.! ஆய்வில் வெளியான பகீர் தகவல்

டெல்டா வேரியன்டை மீண்டும் மனிதர்களுக்கு பரப்பும் ஹாம்ஸ்டர்கள்.! ஆய்வில் வெளியான பகீர் தகவல்

ஹாம்ஸ்டர்கள்

ஹாம்ஸ்டர்கள்

Hamsters : கோவிட் -19-ன் டெல்டா வேரியன்ட் மனிதர்களிடமிருந்து வெள்ளெலிகள் என்று குறிப்பிடப்படும் ஹாம்ஸ்டர்களுக்கு பரவுகிறது.

கடந்த 25 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாத நிலையில், சீரான இடைவெளியில் புதுப்புது வேரியன்ட்கள் உருவாக்கி மக்களை பீதியில் ஆழ்த்தி வருகின்றன. கொரோன இரண்டாம் அலைக்கு டெல்டா வேரியன்ட் காரணமாக இருந்த நிலையில், கொரோனாவின் மூன்றாம் அலைக்கு ஒமைக்ரான் காரணமாக இருந்து வருகிறது. ஒமைக்ரான் ஒரு புறம் மிக வேகமாக பரவி வந்தாலும், இந்தியா உட்பட இன்னும் பல நாடுகளில் இதற்கு முன்னர் கிளை பரப்பி பல்லாயிரக்கணக்கான உயிர்களை குடித்த டெல்டா வேரியன்ட் இன்னும் பரவி கொண்டு தான் இருக்கிறது.

இதனிடையே கோவிட் -19-ன் டெல்டா வேரியன்ட் மனிதர்களிடமிருந்து வெள்ளெலிகள் என்று குறிப்பிடப்படும் ஹாம்ஸ்டர்களுக்கு பரவுகிறது, பின்னர் மீண்டும் ஹாம்ஸ்டர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்று  புதிய தகவல் ஒன்றை சமீபத்திய ஆய்வு வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய ஆய்வு, தி லான்செட்டில் ப்ரீ-பிரிண்ட்டில் வெளியிடப்பட்டது மற்றும் மதிப்பாய்விற்காக காத்திருக்கிறது. மேலும் இந்த ஆய்வு மனிதர்களிடமிருந்து டெல்டா வேரியன்ட்டை பெறும் வெள்ளெலிகள், அந்த வேரியன்ட்டை மீண்டும் மனிதர்களுக்கு பரப்பக்கூடும் என்று கூறுவதாக ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்துள்ளது. கோவிட்-19 வைரஸின் டெல்டா வேரியன்ட்டால் ஹாம்ஸ்டர்கள் மனிதர்களைப் பாதிக்கலாம் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது



நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஹாம்ஸ்டர்கள் மூலம் ஹாங்காங்கில் கடந்த ஜனவரி 15, 2022 அன்று ஹாம்ஸ்டர்களிடமிருந்து மனிதனுக்கு தொற்று பரவிய முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் இதற்கு முன் ஹாங்காங் நாட்டிலிருக்கும் செல்லப்பிராணி கடைகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஹாம்ஸ்டர்களை அழிக்க உத்தரவிடப்பட்டது. குறிப்பாக டிசம்பர் 22 அல்லது அதற்குப் பிறகு வாங்கப்பட்ட ஹாம்ஸ்டர்களை அழிக்க உத்தரவிடப்பட்டது. தற்போது ஹாங்காங்கில் சில மக்கள் இந்த ஹாம்ஸ்டர்களால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் :  புதிய கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கும் சீன விஞ்ஞானிகள்..

சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் துல்லியமாக இருந்தால் மற்றும் ஹாம்ஸ்டர்கள் உண்மையில் கோவிட்-19 ஐ மனிதர்களுக்கு பரப்பினால் இது ஒரு தீவிர கவலையாக மாற கூடும்.



ஏனெனில் அவை உலகளவில் வைரஸை பரப்புவதற்கான மற்றொரு வெக்டராக செயல்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். SARS-CoV-2 வைரஸை மீண்டும் மனிதர்களுக்கு பரப்புவதாக அறியப்பட்ட ஒரே விலங்கு மிங்க் (mink) எனப்படும் விலங்குகள் மட்டுமே. இதன் விளைவாக உலகம் முழுவதும் குறிப்பாக டென்மார்க்கில் மிங்க் பண்ணைகள் பெருமளவில் அழிக்கப்பட்டன. ஹாம்ஸ்டர்களை தவிர மனிதர்களிடமிருந்து பரவிய பிறகே பல விலங்குகளுக்கு கொரோனா காணப்படுகிறது. இதில் பூனைகள், நாய்கள், நீர்நாய்கள், மின்க்ஸ், எலிகள், மான்கள், கொரில்லாக்கள், ஃபெரெட்டுகள் மற்றும் பன்றிகள் உள்ளிட்டவை அடங்கும்.

எனினும் இந்த விலங்குகள் பெரும்பாலும் வைரஸை வித்தியாசமாக சமாளிக்கின்றன. உதாரணமாக, பூனைகள் கோவிட்-19 இலிருந்து மிக விரைவாக மீண்டு விட்டதாக குறிப்பிடப்பட்டது. பன்றிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அவற்றுக்கு அறிகுறிகள் வெளிப்படவில்லை மற்றும் அவற்றிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவவில்லை என்றும் ஒரு அறிக்கை கூறுகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Covid-19, Study finds

அடுத்த செய்தி