ஹோம் /நியூஸ் /உலகம் /

சரசரவென கூடிய கூட்டம்.. மூச்சுவிடக்கூட முடியல... தென் கொரியா நெரிசலில் சிக்கி 150 பேர் பலி!

சரசரவென கூடிய கூட்டம்.. மூச்சுவிடக்கூட முடியல... தென் கொரியா நெரிசலில் சிக்கி 150 பேர் பலி!

கூட்ட நெரிசலில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கூட்ட நெரிசலில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பொதுமக்கள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டே நடந்து சென்றனர். ஒருகட்டத்தில் கூட்ட நெரிசல் எல்லை மீறியதால், பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற ஹாலோவீன் விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

  தென்கொரியாவில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31ஆம் தேதி ஹாலோவீன் எனும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. புனிதர்கள், தியாகிகள், குடும்பத்தினர்கள், நண்பர்கள் என இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சி்யோலின் இடோவான் என்ற இடத்தில் பிரபல சந்தைப் பகுதியில் நடைபெற்ற விழாவில், சுமார் ஒரு லட்சம் பேர் கூடியிருந்தனர்.

  விழா நடந்த இடம் வெறும் 13 அடி அகலமே கொண்ட சிறிய பகுதி என்பதால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், பொதுமக்கள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டே நடந்து சென்றனர். ஒருகட்டத்தில் கூட்ட நெரிசல் எல்லை மீறியதால், பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

  Read More : சோமாலியாவில் சக்தி வாய்ந்த இரட்டை கார் குண்டுவெடிப்பு- ஊடகவியலாளர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பலி!

  இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்களில் சிலரே, மயங்கி விழுந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததுடன், மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இருப்பினும், மூச்சுத்திணறல் காரணமாக 150-க்கும் மேற்பட்டோர் பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சியோல் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதனிடையே, உயிரிழந்த அனைவருக்கும் இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் யுன் சுக் இயோல், நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்ததுடன், கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் உத்தரவிட்டார். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: South Korea