அமெரிக்காவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் போன் ஹெக் செய்யப்பட்டு அவரது நிர்வாணப் புகைப்படங்களை ஹேக்கர் ஒருவர் நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலுக்கு அஞ்சாத அந்த கல்லூரி பெண் அச்சப்படாமல் ஹேக்கர் யார் என்பதை கண்டறிந்து அவர் மீது புகார் அளித்து சிறையில் அடைத்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த நடாலி கிளாஸ் என்ற கல்லூரி மாணவி அங்குள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் வரலாறு பட்டம் படித்து வருகிறார். இந்த பெண்ணின் செல்போன் மற்றும் ஸ்னாப் சேட் அக்கவுண்ட்டை ஹேக்கர் ஒருவர் ஹேக் செய்து, அந்த பெண்ணின் 100க்கும் மேற்பட்ட புகைப்படங்களை ஸ்னாப் சேட் மூலம் அந்த பெண்ணின் சகோதரர், உறவினர், நண்பர்கள் என பலருக்கும் அனுப்பியுள்ளார். இதில், அந்த பெண்ணின் நிர்வாணப்படங்களும் அடக்கம்.
நடாலியின் ஸ்னாப் சேட் அக்கவுண்டில் இருந்து நண்பர்களுக்கு நிர்வாணப் படங்களை அனுப்பிய அந்த ஹேக்கர், நீங்கள் எனது பெஸ்டியாக இருந்தாலும் இதே எனக்கு புகைப்படங்களை திரும்ப அனுப்புங்கள் என மெசேஜும் அனுப்பியுள்ளார். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் முதலில் நடாலி ஏதோ விளையாட்டாகச் செய்கிறார் என நினைத்துள்ளனர். பின்னர் தான் இது போல பலருக்கு மெசேஜ்ஜுகள் சென்றதால் தான் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்ட உண்மை வெளியே வந்துள்ளது. இதனால் அந்த மாணவி நடாலி மனம் உடைந்து போய் செய்வதறியாமல் தவித்துள்ளார். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்யும் அளவிற்கு மனநிலை மோசமடைந்த நிலையில், அவரது தோழி கேட்டி யேட்ஸ் என்பவர் நடாலியிடம் மனம் விட்டு பேசி துணை நின்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக துணிவுடன் எதிர்கொள்ள நடாலி முடிவெடுத்தார். அதன்படி, கிளாஸ் ஸ்னப்சாட் மற்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ உதவியுடன் அந்த ஹேக்கரை பொறிவைத்து பிடித்துள்ளார். தனது நிர்வாணப் புகைப்படத்தை ஆபாச இணையதளத்தில் பகிர்வது போல போலி லிங்க் ஒன்றை உருவாக்கி அதை ஹேக்கர் கிளிக் செய்ய வைத்து அவரை அமெரிக்கா புலனாய்வுத் துறை உதவியுடன் அந்த குற்றத்தை செய்த ஹேக்கரை சாமர்த்தியமாகப் பிடித்துள்ளார் நடாலி. இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர் ஹார்லம் என்ற பகுதியில் வசிக்கும் 29 வயதான டேவிட் மோன்டோர் என்பது தெரியவந்துள்ளது. டேவிட்டை காவல்துறையினர் கைது செய்த நிலையில், அவர் சுமார் 300க்கும் மேற்பட்ட ஸ்னாப்சேட் அகவுண்டகளை ஹேக் செய்தது அம்பலமாகியுள்ளது.
இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் 8 இளம்பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.. ஆண்களை நிர்வாணப்படுத்தி அட்டூழியம் - மியூசிக் வீடியோ ஷூட்டிங்கில் நேர்ந்த கொடூரம்
அமெரிக்காவில் இது போன்று தனிநபர்களின் செல்போன் மற்றும் ஸ்னாப்சேட் அக்கவுண்ட்களை ஹேக் செய்து பிளாக்மெயில் மூலம் பணம் பறிக்கும் சம்பவம் அதிகமாக அரங்கேறி வருகிறது. 2021ஆம் ஆண்டில் மட்டும் இது போன்ற ஆன்லைன் பிளாக்மெயில் புகார்கள் 18,000க்கும் மேற்பட்டது பதிவாகியுள்ளதாக FBI தெரிவித்துள்ளது. இந்த சூழலில் தான் நடாலி துணிவுடன் ஹேக்கரை பிடித்து நீதித்துறையின் முன் நிறுத்தியுள்ளார். கைதான டேவிட்டிற்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hacked, Hacking, Online crime