கடுமையான கட்டுப்பாட்டால் ஹெச்1பி விசா விண்ணப்பங்கள் குறைந்தது

news18
Updated: April 14, 2018, 6:34 PM IST
கடுமையான கட்டுப்பாட்டால் ஹெச்1பி விசா விண்ணப்பங்கள் குறைந்தது
அமெரிக்காவின் கடுமையான கட்டுப்பாட்டால் ஹெச் 1 பி விசா விண்ணப்பங்கள் குறைந்தது
news18
Updated: April 14, 2018, 6:34 PM IST
அமெரிக்காவில் பணிபுரிய தேவையான ஹெச்1 பி விசாவுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவு செய்தார். இதற்காக, ஹெச்1 பி விசா விநியோகம் மற்றும் கால நீட்டிப்பு நடைமுறைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், மாற்றங்களையம் அவர் கொண்டு வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அமெரிக்காவில் பணிபுரிய தேவையான ஹெச்1பி விசா பெறுவதற்காக இந்த ஆண்டு ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். முதுகலைப் பட்டம் படித்தவர்களுக்கு 20 ஆயிரம் விசாக்களும், பொதுவான பிரிவில் 65 ஆயிரம் விசாக்களும் வழங்கப்பட உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்க அரசின் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக, கடந்த ஆண்டுகளைவிட, தற்போது ஹெச்1 பி விசாக்களுக்கான விண்ணப்பங்கள் குறைந்து உள்ளது. கடந்த 2016-17-ம்  ஆண்டுகளில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர், ஹெச்1 பி விசாவுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், இந்த ஆண்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சமாக குறைந்ததாக கூறப்படுகிறது.
First published: April 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்