முகப்பு /செய்தி /உலகம் / எச்1பி விசா தடைக் காலம் முடிவுக்கு வந்தது: நிம்மதியடைந்த இந்தியர்கள்

எச்1பி விசா தடைக் காலம் முடிவுக்கு வந்தது: நிம்மதியடைந்த இந்தியர்கள்

ஜோ பைடன்

ஜோ பைடன்

எச்1பி விசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையின் காலம் முடிவுக்கு வந்ததால் இந்தியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

எச்1பி விசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையின் காலம் முடிவுக்கு வந்ததால் இந்தியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி பணியாற்ற வெளிநாட்டினருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா மூலம் இந்தியா, மற்றும் சீன நாட்டினர் அதிகப் பயனடைந்து வருகின்றனர்.

கொரோனாவால் அமெரிக்கா பாதிக்கப்பட்ட போது ஏராளமான அமெரிக்கர்கள் வேலை இழந்தனர். இதை வைத்து விசா தடைக்காக எப்போதும் பேசி வந்த அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், கொரோனா கால முடக்கம், மற்றும் வேலையின்மையைக் காரணம் காட்டி எச்1பி விசா வழங்கலுக்கு தடை விதித்தார்.

இந்த உத்தரவு கடந்த டிசம்பரில் காலாவதியாகி இருந்தது. எனினும் அந்த தடையை நீட்டித்து அவர் உத்தரவு பிறப்பித்தார்.கடந்த ஜனவரியில் நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் முன்னாள் அதிபர் டிரம்பின் குடியுரிமை மற்றும் குடிவரவு கொள்கைகள் மோசமாக இருப்பதாகவும் அவை திரும்பப் பெறப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினத்துடன் எச் - 1பி விசாவுக்கு இருந்த தடை முடிவுக்கு வந்தது. அந்த தடையை மேலும் நீட்டிக்க விரும்பாத அதிபர் பைடன் அந்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தார்.இனி வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு எச் - 1பி விசாக்கள் வழங்கப்படும். தடை நீக்கப்பட்டுள்ளதால் இந்தியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

அயல்நாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களை அமெரிக்கா வரவழைக்க ஏதுவான எச்1பி விசாவுக்கு கடந்த ஜூனில் தடை விதிக்கப்பட்டது. அதிபர் டிரம்ப் கெஸ்ட் வொர்க்கர்ஸ் விசா வேளாண் அல்லாத சீசனல் தொழிலாளர்களுக்கும் பொருந்துவதாக இருந்தது. இதனை படுமோசம் என்று பைடன் நிர்வாகம் சீராய்வு செய்தது.

அதே போல் அமெரிக்கக் குடியுரிமைக்கான கிரீன் கார்டு புதிதாக அளிக்கவும் டிரம்ப் நிர்வாகம் இட்டிருந்த உத்தரவை பைடன் முன்னதாக நீக்கினார்.

டிரம்பின் இந்த அவசர அடி முடிவுகள் அமெரிக்காவுக்கு நன்மை செய்வதை விட பாதிப்பையே ஏற்படுத்தியது அமெரிக்கர்களே தங்கள் குடும்பத்தினருடன் ஒன்று சேர முடியாமல் போனது என்று அதிபராவதற்கு முன்னமேயே பைடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபர் 1ம் தேதி கலிபோர்னியா கோர்ட் நீதிபதி, வர்த்தகக்குழுக்கள்  மற்றும் அமெரிக்க உற்பத்தியாளகள் மற்றும் வணிகக் குழுவினர் தொடர்ந்த வழக்கில் குடிபெயர்தல் பற்றிய விவகாரங்களில் அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளதாகக் கூறி அவரது உத்தரவுக்கு தடை விதித்தது.

இதனை எதிர்த்து டிரம்ப் நீதித்துறை சான்பிரான்சிஸ்கோவில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையி இந்த கோர்ட் ஏப்ரல் 7ம் தேதி இருதரப்பையும் அறிக்கை கேட்டு உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Donald Trump, H1 B Visa, Joe biden, USA