• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இலங்கை அதிபர் தேர்தல் - வாக்காளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு

இலங்கை அதிபர் தேர்தல் - வாக்காளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு

இலங்கை அதிபர் தேர்தல்

இலங்கை அதிபர் தேர்தல்

Gunmen Open Fire on Bus Carrying Muslim Voters in Sri Lanka Hours Before Presidential Polls Begin

  • News18
  • Last Updated :
  • Share this:
    இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடந்து வரும் நிலையில், வாக்களிக்கச் சென்ற முஸ்லிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. கோத்தபய ராஜபக்சே, சஜித் பிரேமதாசா என்று 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இலங்கையின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வடமேற்கு பகுதியில்,

    ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவுக்கும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சேவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான அனுரா குமாரா திசநாயகவும் இவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளார். இன்று காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5:00 மணி வரை நடக்கிறது. இதில் 1.6 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்கவுள்ளனர்.

    இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், வடமேற்கு பகுதியில் ஓட்டுப்போட சென்ற முஸ்லிம்கள் பஸ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியும் கற்கறை வீசியும் தாக்கினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: