ஹோம் /நியூஸ் /உலகம் /

பணத்துக்காக ப்ளான்.. துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட 21 குழந்தைகள்.. பரபரப்பு சம்பவம்!

பணத்துக்காக ப்ளான்.. துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட 21 குழந்தைகள்.. பரபரப்பு சம்பவம்!

நைஜீரியா குழந்தைகள் கடத்தல்

நைஜீரியா குழந்தைகள் கடத்தல்

பண்ணையில் பயிர்களை அறுவடை செய்யும் போது 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அக்டோபர் 30 அன்று கடத்தப்பட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  நைஜீரியாவின் வடமேற்கு பகுதியான கட்சினா மாநிலத்தில் உள்ள பண்ணை ஒன்றில் இருந்து கடந்த வாரம் துப்பாக்கி ஏந்திய நபர்களால் கடத்தப்பட்ட 21 குழந்தைகள் அடங்கிய குழு விடுவிக்கப்பட்டு அவர்களது குடும்பத்தினருடன் சனிக்கிழமை இணைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

  ஜனாதிபதி முஹம்மது புஹாரியின் சொந்த மாநிலமான கட்சினாவில் சமீபமாக ஆட்கடத்தல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆயுதமேந்திய கும்பல் பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள் மற்றும் பண்ணைகளில் இருந்து மக்களைக் கடத்திச் சென்று அவர்களது உறவினர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

  கட்சினாவில் உள்ள கம்ஃபானின் மைலாஃபியா மற்றும் குர்மின் டோகா கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ள பண்ணையில் பயிர்களை அறுவடை செய்யும் போது 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அக்டோபர் 30 அன்று கடத்தப்பட்டுள்ளனர்.

  iஇதையும் படிங்க: விண்வெளிக்கு பறக்கும் குரங்குகள்.. இனப்பெருக்க ஆராய்ச்சியில் அடுத்தக்கட்டம் செல்லும் சீனா!

  8 மற்றும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகலாய் கடத்தி அவர்களின் பெற்றோரிடம் இருந்து, 1.5 மில்லியன் நைரா (சுமார் ரூ.2,84,711.20) கேட்டு மிரட்டியுள்ளனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் பணம் கொண்டு வ்ராவிட்டால் இனி எப்போதும் அவர்களது குழந்தைகளை பார்க்க முடியாது என்று மிரட்டியுள்ளனர். இதனால் அடித்து பிடித்து பெற்றோர்கள் பணத்தை பிரட்டி தங்கள் குழந்தைகளை மீட்டுள்ளனர்.

  கடத்தலில் ஈடுபட்ட ஒரு சிலர் ஓடிவிட்ட நிலையில் மற்றவர்களை போலீஸ் சுற்றிவளைத்து கைது செய்தனர். கடத்தப்பட்ட குழந்தைகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

  ஜனாதிபதியின் சொந்த மாநிலத்திலேயே இவ்வாறான குற்றங்கள் நடப்பது மக்களிடம் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Children, Nigeria