செய்தி ஊடக நேரலையின் போது நிருபரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி திருடிச் சென்ற நபர்... வைரலாகும் வீடியோ!!

செய்தி ஊடக நேரலையின் போது நிருபரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி திருடிச் சென்ற நபர்... வைரலாகும் வீடியோ!!

வைரலாகும் வீடியோ!!

முதலில் நிருபர் ஓர்டினோலாவின் முகத்தில் ரிவால்வரை காட்டி தொலைபேசியை தருமாறு மிரட்டினார்.பின்னர் அந்த நபர் தனது துப்பாக்கியை கேமராமேன் மற்றும் குழுவினரிடையே காட்டி, அவர்களிடம் இருக்கும் பணம் மற்றும் தொலைபேசிகளை ஒப்படைக்குமாறு மிரட்டியுள்ளார்.

  • Share this:
தென் அமெரிக்காவின் ஈக்வடார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.19) தனியார் செய்தி ஊடகத்தின் ஒரு நேரடி ஒளிபரப்பின் போது, நிருபர் மற்றும் தொலைக்காட்சி குழுவினரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேரலை என்று கூட பார்க்காமல் அந்த கொள்ளையன் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அதில் பத்திரிகையாளரிடமும் தொலைக்காட்சி குழுவினரிடமும் பணத்தை தன்னிடம் ஒப்படைக்கக் வேண்டும் என துப்பாக்கி காட்டி மிரட்டிய காட்சிகள் பதிவாகியுள்ளன. இது குறித்து SkyNews வெளியிட்ட அறிக்கையின்படி, ஈக்வடார் ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர் டியாகோ ஓர்டினோலா (Diego Ordinola) நேற்று குவாயாகில் நகரில் உள்ள Estadio Monumental கட்டிடத்திற்கு வெளியில் இருந்து DirecTV ஸ்போர்ட்ஸிற்காக செய்திகளை நேரலையில் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு திடீரென வந்த கொள்ளைக்காரர் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்தார். மேலும் அந்த மர்ம நபர் முகமூடி அணிந்து முகத்தை மறைத்திருந்தார். முதலில் நிருபர் ஓர்டினோலாவின் முகத்தில் ரிவால்வரை காட்டி தொலைபேசியை தருமாறு மிரட்டினார்.பின்னர் அந்த நபர் தனது துப்பாக்கியை கேமராமேன் மற்றும் குழுவினரிடையே காட்டி, அவர்களிடம் இருக்கும் பணம் மற்றும் தொலைபேசிகளை ஒப்படைக்குமாறு மிரட்டியுள்ளார்.பின்னர் அக்குழுவில் இருந்த ஒருவரிடம் இருந்து மொபைல் போனை பிடிங்கிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். பின்பு அந்த நபர் மற்றொரு நபருடன் இருசக்கர வாகனத்தில் தப்பித்து சென்றார். இவை அனைத்தும் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் சரியாக மதியம் 1.00 மணிக்கு நடந்துள்ளது. மேலும் இந்த வீடியோவை பத்திரிகையாளர் டியாகோ ஓர்டினோலா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூடிய விரைவில் கொள்ளையனை கண்டுபிடித்து விடுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
Published by:Arun
First published: