28 முறை கைகொடுக்கும் எலிகள்: பேருந்து ஓட்டும் குள்ளமான நபர் - 2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்

அடுத்த ஆண்டுக்கான கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் சில வினோதமான சாதனைகள் இடம்பெற்றுள்ளன.

28 முறை கைகொடுக்கும் எலிகள்: பேருந்து ஓட்டும் குள்ளமான நபர் - 2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்
கின்னஸ் சாதனை பெற்றவர்கள்
  • News18 Tamil
  • Last Updated: September 20, 2020, 7:51 AM IST
  • Share this:
உலக சாதனையாளர்களை கவுரவிக்கும் கின்னஸ் புத்தகத்தில் வினோதமான, ஆச்சர்யமான சாதனைகளுக்கு எப்போதும் பஞ்சம் இருந்ததில்லை. அந்த வகையில் குட்டி எலிகள் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளன. அந்த எலிகளை வளர்க்கும் இங்கிலாந்தின் லூக் ராபர்ட்டிற்கு 30 விநாடிகளில் 28 முறை கை கொடுத்துள்ளது. அதுதான் சாதனைக்கான காரணம்.  ஆஸ்திரேலியாவின் ஈவா க்ளேர்க்(Eva Clarke) என்ற பெண் 24 மணி நேரத்தில் 5,555 PUSH-Up எடுத்து, ஒரே நாளில் 3,737 Pulls-Up எடுத்தது என பெண்கள் பிரிவில் உலக சாதனைகளை வசமாக்கி இருக்கிறார்.

வெறும் 136 சென்டி மீட்டர் அதாவது நாலரை அடி உயரமே உள்ள இங்கிலாந்தின் ஃப்ரன்க் ஃப்யிக் ஹாசிம்(Frank Faeek Hachem) பேருந்து ஓட்டுகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் சாதிக்க உயரம் தடையில்லை என்பதை நிரூபித்து அவர், உலக சாதனை படைத்துள்ளார்.

நைஜீரியாவைச் சேர்ந்த 12 வயது சுட்டிப்பையன் நம்ம ஊரு கரகாட்ட ஸ்டைலில் ஒரு சாதனை புரிந்திருக்கிறான். தலையில் ஒரு கால்பந்தை வைத்தபடி, காலால் மற்றொரு கால்பந்தை கீழே விழாமல் 111 முறை தட்டிவிட்டதுதான் அந்த ஆச்சர்ய சாதனை.


உயிரைக் கொடுத்து உலக சாதனை புரிபவர்கள் ஒருபுறம் இருக்க வெட்டியாக ஒரு சாதனை புரிந்திருக்கிறார் இந்த கேரி டஸ்சில்(Gary Duschl). அதாவது வாயில் போட்டு மெல்லுகின்ற சூயிங்கம் மிட்டாயின் அட்டைகளை சங்கிலிபோல 1,06,810 அடிக்கு கோர்த்து சாதித்திருக்கிறாராம். துபாயில இருக்குற உயரமான புர்ஜ் கலிபாவை விட 40 மடங்கு உயரமான அளவுக்கு நீளுமாம் இந்த அட்டைச் சங்கிலி. இப்படி வித்தியாசமானவற்றை செய்து உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஆண்டு கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ளனர்.
First published: September 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading