காலநிலை மாற்றம்! ஐநா சபையில் உலகத் தலைவர்கள் முன் கொதித்தெழுந்த சிறுமி

மிகப் பெரிய வெளியேற்றத்தின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நீங்கள் பணம், கற்பனைக் கதைகள், பொருளாதார வளர்ச்சி அதைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

காலநிலை மாற்றம்! ஐநா சபையில் உலகத் தலைவர்கள் முன் கொதித்தெழுந்த சிறுமி
கிரிட்டா தங்பெர்க்
  • News18
  • Last Updated: September 24, 2019, 7:52 PM IST
  • Share this:
உங்களுடைய வெற்று வார்த்தைகளால் எங்களுடைய கனவுகளைத் திருடிவிட்டீர்கள்; எனது குழந்தைப் பருவத்தைத் திருடி விட்டீர்கள் என்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிரிட்டா தங்பெர்க் என்ற 16 வயது சிறுமி ஐக்கிய நாடுகள் சபையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடைபெற்றுவருகிறது. அந்த மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். அந்த மாநாட்டில் உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் உலகளவிலுள்ள சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டு பேசினார்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரிட்டா தன்பெர்க்கின் பேச்சு உலக அளவில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர், உலகத் தலைவர்களையும் ஐ.நா சபையின் மீதும் மிகக் கடுமையான விமர்சனை முன்வைத்துள்ளார். அந்த மாநாட்டில் பேசிய அவர், ‘நாங்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதைச் சொல்வதற்குதான் இங்கு வந்துள்ளேன். இது மிகவும் தவறானது. உங்களுடைய(ஐநா) வெற்று வார்த்தைகளால் நீங்கள் என்னுடைய கனவுகளைத் திருடி விட்டீர்கள்; எனது குழந்தைப் பருவத்தைத் திருடி விட்டீர்கள்; மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்...


மக்கள் உயிரிழக்கிறார்கள்.. ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. மிகப் பெரிய வெளியேற்றத்தின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நீங்கள் பணம், கற்பனைக் கதைகள், பொருளாதார வளர்ச்சி அதைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்.. 30 ஆண்டுகளுக்கு மேலாக அறிவியல் தெளிவாக உணர்த்துகிறது. அதைவிடுத்து தொடர்ச்சியாக நீங்கள் வெளியே பார்க்கிறீர்கள். நீங்கள் செய்தது போதும் என்று கூறுவதற்கு நான் இங்கே வந்துள்ளேன். உங்களுக்கு எவ்வளவு தைரியம். உங்கள் பேச்சைக் கேட்கிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசரத்தைப் புரிந்துகொண்டுள்ளோம் என்று கூறுகிறீர்கள். நான், எவ்வளவு வருத்தமாக இருக்கிறேன். நான் எவ்வளவு கோபமாக இருக்கிறேன் என்பது முக்கியமல்ல. நீங்கள் இந்தச் சூழலைப் புரிந்துகொண்டிருந்தாலும், அதற்கேற்றாற் போல செயல்படுவதற்கு தவறிவிட்டீர்கள். அதனால், நீங்கள் தீய சக்தியாக இருக்கலாம்.. அதனால், தீய சக்தியை நிராகரிக்கிறேன்.

நாம் இதைவிட்டு விலகி இருக்க முடியாது. இங்கேயே இப்பொழுதை நம் விதிமுறைகளை வரையறுக்கவேண்டும். இந்த உலகம் விழித்துக்கொள்கிறது. மாற்றம் வருகிறது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்’ என்று ஆதங்கமாக பேசினார். அவருடைய உலக அரங்கில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .Also see:

First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்