ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் 18 வயதான இளம்பெண் கிரேட்டா தன்பெர்க் (Greta Thunberg). இவர் தனது சிறுவயது முதலே ஒரு காலநிலை ஆர்வலராக (climate activist) செயல்பட்டு வருகிறார். நாடுகளின் கார்பன் ஒழுங்குமுறைக் கொள்கைகள் முதல் பனிப்பாறைகள் உருகுவது என பல்வேறு நாடுகளில் உள்ள காலநிலை பிரச்சனைகள் உட்பட இதுவரை பல விஷயங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
ஸ்வீடிஷ் காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க். இளம் வயதிலேயே இவர் சர்வதேச அளவில் பிரபலமாக முக்கிய காரணம் துணிச்சலான பேச்சும், உலக தலைவர்களுக்கு எதிராக இவர் தைரியமாக கூறிய கருத்துக்களும் தான். அந்த வகையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பற்றி ட்விட்டரில் நிறைய முறை கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் பல மாதங்களாக போராடிய நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதற்காக டெல்லி காவல் நிலையத்தில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனினும் தன் கருத்தில் இருந்து பின் வாங்கப்போவதில்லை என்றும் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பேன் என்றும் தைரியமாக கூறினார்.
ALSO READ : இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட மோதல்... ராக்கெட் தாக்குதலில் 70 பேர் பலி
இஸ்ரேலுக்கும் - பாலஸ்தீனத்துக்கும் இடையிலான விரோதம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் கிரெட்டா துன்பெர்க்கின் நிலைப்பாடு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையே கடந்த சில நாட்களாக கடும் மோதல் நிலவி வருகிறது. இதனால் ஜெருசலேம் நகரில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமானோர் கொல்லப்பட்ட நிலையில், இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் மத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இரு நாடுகளும் கலவர பூமியாக மாறியுள்ள நிலையில், #SavePalestine என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தொடர்ந்து வைரலாக உள்ளது.
https://twitter.com/GretaThunberg/status/1392112286479917061
இதுபோன்ற ஒரு முக்கியமான சூழ்நிலையில், காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கின் ட்விட் ஒன்று கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில் "தெளிவாக இருக்க வேண்டும்: நான் இஸ்ரேலுக்கோ பாலஸ்தீனத்துக்கோ "எதிராக" இல்லை. யாரிடமிருந்தும் அல்லது எந்தப் பகுதியிலிருந்தும் எழும் எந்தவொரு வன்முறை அல்லது அடக்குமுறைக்கு நான் எதிரானவள் என்று சொல்ல தேவையில்லை" என்று கூறி உள்ளார்.
ALSO READ : இஸ்ரேலின் அதிகாலை வான்வழித் தாக்குதல்: காசாவில் 35 பேர், இஸ்ரேலில் 5 பேர் பலி- உலக நாடுகள் கவலை
அநீதி நடக்கும் போது எப்போதும் தைரியமாக குரல் கொடுக்கும் நீங்கள், இந்த விவகாரத்தில் நடுநிலை வகிப்பது போல் கருத்து தெரிவித்துள்ளீர்கள் என நெட்டிசன்கள் பலரும் கிரெட்டாவிற்கு எதிராக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அநீதி சூழ்நிலைகளில் நீங்கள் நடுநிலை வகிப்பது, அடக்குமுறையாளருக்கு ஆதரவான பக்கத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என அர்த்தம் என்றும் பல யூஸர்கள் கிரெட்டா துன்பெர்க்கை திட்டியுள்ளனர்.
https://twitter.com/tomatomatis/status/1392290946557964290
மற்றொரு யூஸர் "தனது குழந்தைப் பருவம் பறிக்கப்படுவதாக கவலைப்படுவதைப் பற்றி அவள் (கிரெட்டா)அழுதாள், குழந்தைகள் உட்பட பலர் உண்மையில் கொல்லப்படுகிறார்கள், இப்போது அவளால் எப்படி நடுநிலை வகிக்க முடிகிறது.? என கேள்வி எழுப்பி உள்ளார்.
ALSO READ : பில்கேட்ஸ் விவகாரத்தின் பின்னணி என்ன?- பாலியல் வழக்கில் தண்டனை பெற்றவருடன் தொடர்பா?
மற்றொருவர் கூறும் போது, "காலநிலை மாற்றம் என வரும் போது உங்கள் கருத்துக்களைப் பற்றி நீங்கள் மிகவும் வலுவாக குரல் கொடுக்கிறீர்கள், ஆனால் ஒரு இனப்படுகொலை நடக்கும்போது நீங்கள் நடுநிலையை எடுக்க முடியாது. நீங்கள் இந்த அறிக்கையை வெளியிட்ட போதிலும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து நீங்கள் மவுனமாக இருப்பதால் நீங்கள் அடக்குமுறையாளரின் (இஸ்ரேல்) பக்கத்தைத் தேர்ந்தெடுத்துளீர்கள்" என கடுமையாக சாடியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.