• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ரஷ்ய அதிபருக்கு ட்விட்டர் ப்ரொபைல் மூலம் பதிலடி கொடுத்த கிரிட்டா தங்பெர்க்!

ரஷ்ய அதிபருக்கு ட்விட்டர் ப்ரொபைல் மூலம் பதிலடி கொடுத்த கிரிட்டா தங்பெர்க்!

கிரிட்டா, புதின்

கிரிட்டா, புதின்

கால நிலை மாற்றம் குறித்து கிரிட்டா தங்பெர்க் உலக நாடுகளின் தலைவர்களையும், ஐ.நாவை விமர்சனம் செய்து ஆக்ரோஷமாக பேசினார். 

  • News18
  • Last Updated :
  • Share this:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் சுற்றுச்சூழல் போராளி கிரிட்டா தங்பெர்க், ட்விட்டரில் அவரது சுயக்குறிப்பை பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் கால நிலை மாற்றம் குறித்து கிரிட்டா தங்பெர்க் உலக நாடுகளின் தலைவர்களையும், ஐ.நாவை விமர்சனம் செய்து ஆக்ரோஷமாக பேசினார். அவருடைய பேச்சு உலக அளவில் வரவேற்பைப் பெற்றாலும், பலர் விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின், ’கிரிட்டாவுக்கு நல்ல எண்ணங்கள் இருக்கலாம். அதில் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அதுகுறித்து முதிர்ச்சியற்று பேசியுள்ளார். வளரும் நாடுகள் குறித்து அவருக்கு போதுமான சிந்தனைகள் இல்லாமல் இருந்திருக்கலாம்’ என்று பேசியிருந்தார். விளாடிமிர் புதினுக்கு பதிலளிக்கும் வகையில், கிரிட்டா அவருடைய ட்விட்டர் பக்கத்தின் சுயக்குறிப்பை மாற்றியுள்ளார். அதில், ‘ஒரு அன்பான ஆனால், மோசமாக பேசிய பதின்பருவப் பெண்’என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: