• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • 60 அடி உயரத்துக்கு க்ரெட்டா தன்பெர்க்கின் ஓவியம்... பெருமைபடுத்தும் அமெரிக்க நகரம்!

60 அடி உயரத்துக்கு க்ரெட்டா தன்பெர்க்கின் ஓவியம்... பெருமைபடுத்தும் அமெரிக்க நகரம்!

க்ரெட்டா தன்பெர்க் (Twitter/@BarakaMounira)

க்ரெட்டா தன்பெர்க் (Twitter/@BarakaMounira)

இந்த ஓவியத்துக்கான நிதியை அமெரிக்காவின் பெரும் நிறுவனமான OneAtmosphere.org வழங்கியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சர்வதேச அளவில் காலநிலை மாற்றத்துக்கு எதிராக உலகம் இணைய வேண்டும் என தனி ஒருவராகப் போராடி வருபவர் 16 வயதான க்ரெட்டா தன்பெர்க்.

காலநிலை மாற்றத்துக்கு எதிராக உலகம் முழுவதும் பயணித்துப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டுமல்லாது உலகப் பெரும் தலைவர்களுக்கெல்லாம் காலநிலை மாற்றத்தைத் தடுக்க உதவுமாறு சவால் விடுத்து வருகிறார் 16 வயதே ஆன க்ரெட்டா தன்பெர்க்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் முக்கிய சாலை அருகே உள்ள சுவர் ஒன்றில் 60 அடி உயரத்துக்கு க்ரெட்டாவின் உருவம் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. முதன்முறையாக அரசியல் சார்ந்து ஒரு ஓவியத்தை மிகவும் பெருமையுடம் வரைந்துள்ளதாகக் கூறுகிறார் ஓவியர் ஆண்ட்ரெஸ் பீட்டர்ஸ்செல்லி.

இந்த ஓவியத்துக்கான நிதியை அமெரிக்காவின் பெரும் நிறுவனமான OneAtmosphere.org வழங்கியுள்ளது. சர்வதேச அளவில் க்ரெட்டா மேற்கொண்ட காலநிலை மாற்றத்துக்கு எதிரான இளைஞர் இயக்கத்தைக் கவுரவிக்கும் ஓவியமாக இதைக் கருதுவதாக அப்பகுதியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க: ஆர்டிக் பனிப்பாறைகள் உருகுவதால் கடல் உயிரினங்களுக்குப் பரவும் அபாயகர வைரஸ்..!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: