• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கடலோரப் பகுதிகளுக்கு பெரும் ஆபத்து - 8.5 பில்லியன் டன் பனிக்கட்டி உருகியதால் அதிர்ச்சி!

கடலோரப் பகுதிகளுக்கு பெரும் ஆபத்து - 8.5 பில்லியன் டன் பனிக்கட்டி உருகியதால் அதிர்ச்சி!

ice berg

ice berg

கிரீன்லாந்து இழந்துள்ள பனிகட்டியின் அளவு ஆந்திராவை இரண்டு இன்ச் நீரில் மூழ்கடிக்க போதுமான அளவாகும்.

  • Share this:
கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலும் ஏற்பட்ட காட்டுத் தீ, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரழிவுகள் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அதிக வெப்பநிலையின் விளைவாக கிரீன்லாந்தில் வழக்கத்திற்கு மாறாக ஆர்க்டிக் பெருங்கடலில் இருக்கும் பனிப்பாறைகள் மிக அதிக அளவில் உருகியுள்ளன. சமீபத்தில் கோப்பர்நிக்கஸ் சென்டினல் -2 (Copernicus Sentinel-2) செயற்கைக்கோள் எடுத்தனுப்பிய புகைப்படங்கள் மூலம் உருகிய பனிப்பாறைகளில் இருந்து நீர் வெளியேறுவது தெரிய வந்துள்ளது.

அண்டார்டிகாவுக்கு அடுத்தபடியாக கிரீன்லாந்து பூமியில் இரண்டாவது பெரிய பனிக்கட்டியை கொண்டுள்ள நிலையில், காலநிலை மாற்றத்தின் காரணமாக பில்லியன் கணக்கான பனிக்கட்டிகள் உருகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உலகளாவிய வெப்ப நிலை உயர்வை குறைக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஆர்க்டிக்கில் நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக கிரீன்லாந்து மிகப்பெரிய அளவிலான பனிக்கட்டியை அதாவது சுமார் சுமார் 22 ஜிகா டன்கள் பனிக்கட்டியை இழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: புளூடூத் இயர்போன் சாதனம் வெடித்து சிதறியதில் 15 வயது சிறுவன் பலி.. மருத்துவர் சொன்ன காரணம்!

இந்த அளவு பனி உருகியுள்ள நிகழ்வு கிரீன்லாந்தின் வரலாற்றில் ஒரு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. கடந்த 1950-க்குப் பிறகு பனிகட்டி உருகிய நிகழ்வில் தற்போதைய நிகழ்வு, மூன்றாவது பெரிய இழப்பாகும். மற்ற இரு பெரிய இழப்புகள் 2012 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பதிவானது. இதனிடையே டேனிஷ் அரசால் வெளியிடப்பட்ட டேட்டாக்கள் படி, கிரீன்லாந்து செவ்வாயன்று 8.5 பில்லியன் டன் பரப்பளவிலான பனிக்கட்டிகள், வியாழக்கிழமை மேலும் 8.4 பில்லியன் டன்கள் அளவிலான பனிக்கட்டிகளை இழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் உள்ள லீஜ் பல்கலைக்கழகத்தின் (University of Liege) காலநிலை விஞ்ஞானி சேவியர் ஃபெட்வீஸின் கூற்றுப்படி, தற்போது சுமார் 22 ஜிகா டன்கள் அளவிலான பனியிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 12 ஜிகா டன் அளவிலான பனி உருகி அதிலிருந்து வெளியேறிய நீர் கடலுக்குள் ஓடியுள்ளதாகவும், மீதம் ஸ்னோபேக்கால் உறிஞ்சப்படுவதாகவும் கூறியுள்ளார்.

Also Read: திடீரென திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. மணமகன் வீட்டாரை அடித்துவிரட்டிய பெண் வீட்டார்

தற்போது கிரீன்லாந்து இழந்துள்ள பனி காரணமாக கடலில் நீர் பாயும் அளவு அதிகரித்துள்ளது, காலநிலை மாற்றத்தால் உலகளாவிய கடல் மட்டம் அதிகரிப்பதை மேலும் ஊக்குவிக்கிறது. தொடர் காலநிலை மாற்றம் காரணமாக ஒருகட்டத்தில் கடல் நீர் வெப்பமடைந்து அதன் அளவு விரிவடையும் போது, கடலோரப் பகுதிகள் நிலத்தை இழந்து இறுதியில் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி மார்கோ டெடெஸ்கோ கூறுகையில், இதுபோன்ற நிகழ்வுகள் பின்னூட்ட சுழல்களை (feedback loops) உருவாக்கலாம், இது அதிக புவி வெப்பமடைதல் மற்றும் உருகுவதற்கு வழிவகுக்கும் என்று கூறினார். உருகிய பனி மிகவும் அதிக அளவிலான சூரிய வெப்பத்தை உறிஞ்சுவதால் இது நம் பூமி இன்னும் அதிக வெப்பமடைதல் மற்றும் மேலும் அதிக அளவிலான பனிக்கட்டிகள் உருகுவதற்கு வழி ஏற்படுத்துகிறது என்று கவலை தெரிவித்துள்ளார்.

பனியிழப்பைக் கணிக்கப் பயன்படுத்தப்படும் மாடல்கள், சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் சுழற்சி முறைகளை துல்லியமாக காட்டுவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இது எதிர்காலத்தில் கிரீன்லாந்தின் பனியின் உருகும் திறனை குறைத்து மதிப்பிட காரணமாக அமையலாம் என்றும் கூறினார். சமீபத்தில் கிரீன்லாந்து இழந்துள்ள பனிகட்டியின் அளவு அமெரிக்க மாகாணமான புளோரிடா அல்லது இந்தியாவின் ஆந்திராவை இரண்டு இன்ச் நீரில் மூழ்கடிக்க போதுமான அளவாகும்.

மும்பை, சென்னை, ஜகார்த்தா, டோக்கியோ போன்ற கடலோர நகரங்கள் மற்றும் மாலத்தீவு போன்ற தீவு நாடுகள் கடல் மட்டம் உயரும்போது பாதிக்கப்பட மிகவும் வாய்ப்புள்ள பகுதிகள். இதில் 2050-ஆம் ஆண்டுக்குள் மும்பை நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 40% பேர் கடற்கரையிலிருந்து 100 கிலோ மீட்டருக்குள் வாழ்வதால் நிலத்தினை கடல் மூழ்கடிப்பது, பெரிய அலைகள் ஊருக்குள் நுழைவது போன்ற கடலோர ஆபத்துகளிலிருந்து மக்களை பாதுகாக்க அவசர தேவை ஏற்பட்டுள்ளது என்று உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் பெட்டேரி தலாஸ் முன்னரே கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்து போன்ற நாடுகள் அதன் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட பாதி ஏற்கனவே கடல் மட்ட உயரத்தில் அல்லது அதற்குக் கீழே இருப்பதால், கடல் மட்டம் உயருவது அந்நாடுகளுக்கு அபாயம் உள்ளதை காட்டுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: