அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம்... டிரம்ப் உத்தரவால் யாருக்கு பாதிப்பு?

மருத்துவத்துறையினர், அமெரிக்கர்களை மணம்புரிந்தவர்கள், அவர்களது 21 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கிரீன் கார்டு பெறுவதில் சிக்கல் இல்லை

அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம்... டிரம்ப் உத்தரவால் யாருக்கு பாதிப்பு?
கோப்புப் படம்
  • Share this:
அமெரிக்காவில் எச்1பி விசாவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஜூன் இறுதிக்குள் வேலைவாய்ப்பை இழக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதே நேரத்தில் டிரம்பின் புதிய உத்தரவு அங்கு ஏற்கெனவே நிரந்தர குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை கோடி அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை வெளிநாட்டவர் பறிப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து இரு மாதங்களுக்கு அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்குரிய குடியுரிமை விசா வழங்கும் பணி 2 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இதனால் யார் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என குழப்பங்கள் ஏற்பட்டன. இந்த உத்தரவு அமெரிக்காவுக்கு வெளியே வசிப்போருக்கும், கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பித்து காத்திருப்போருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் நியூயார்க்கில் 20 ஆண்டுகளாக குடியுரிமை தொடர்பான வழக்குளில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் கவிதா ராமசாமி.


எனினும் மருத்துவத்துறையினர், அமெரிக்கர்களை மணம்புரிந்தவர்கள், அவர்களது 21 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கிரீன் கார்டு பெறுவதில் சிக்கல் இல்லை. ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு 60 நாள் தடை செல்லும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அதே நேரத்தில் எதிர்வரும் தேர்தலை கருதி அதிபர் மேற்கொண்ட முடிவு என்றும் பரவலாக பேசப்படுகிறது. இருப்பினும், H1B விசாவில் பணியாற்றி வரும் இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவரை பணி நீக்கம் செய்யும்படி அமெரிக்க அரசு மறைமுக உத்தரவை பிறப்பித்திருப்பதாக கூறியிருப்பது பல லட்சம் இந்தியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மென்பொருள் பொறியாளர்கள் உள்ளிட்ட திறன்மிக்க தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் H1B தற்காலிக விசாவில் சுமார் 3 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர், அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டால் 60 நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருக்கமுடியும்.வேலை பறிக்கப்படும்பட்சத்தில் 60 நாட்களுக்குள் புதிய வேலையை தேடிக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் ஜூன் மாத இறுதியில் அவர்களுக்கு சட்டச் சிக்கல் காத்திருக்கிறது.

எனவே 60 நாள் கருணைக் காலத்தை 180 நாளாக நீட்டிக்கவேண்டும் என அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் எச்1பி விசா பெற்ற இந்தியர்கள பணி நீக்கம் செய்யும் தகவல் உறுதியாக வெளியாகவில்லை என்றபோதிலும் அவ்வாறு செய்யக்கூடாது என இந்தியா கோரியுள்ளது. இதற்கு டிரம்ப் செவிசாய்ப்பாரா என்பது வரும்நாட்களில்தான் தெரியவரும்.First published: April 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading