ஹோம் /நியூஸ் /உலகம் /

ப்ரெக்ஸிட் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது- பிரிட்டன் பிரதமர் போரிஸ் அறிவிப்பு

ப்ரெக்ஸிட் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது- பிரிட்டன் பிரதமர் போரிஸ் அறிவிப்பு

போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் எதிர்கட்சியினர் இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஐரோப்பிய யூனியன் மறும் பிரிட்டனுக்கு இடையே ப்ரெக்ஸிட் ஒப்பந்தம் ஏற்கப்பட்டுள்ளது என பிரட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

ப்ரெக்ஸிட் வெளியேற்றம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒப்பந்தம் குறித்தான சட்டப்பூர்வ அறிக்கை இரு தரப்பினருக்கும் இடையே தயார் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் பிரிட்டன் நாடாளுமன்றம் இடையே ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன் க்ளாட் ஜங்கர் ‘நியாயமான நடுநிலையான ஒப்பந்தம்’ எனப் பாராட்டியுள்ளார். ஆனால், பிரிட்டன் எதிர்கட்சியினர் இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர். இதுகுறித்து எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியின் ஜெரிமி கார்பின் கூறுகையில், “ஐரோப்பிய யூனியன் கமிஷன் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடாது.

மக்கள் மத்தியில் பொது ஓட்டு நடத்தப்பட்டே முடிவு எடுக்கப்பட வேண்டும். இது மக்களை ஒன்றுபட்டு இருக்கச்செய்யாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெறும் இந்தியர்!

First published:

Tags: BREXIT