Home /News /international /

முதல்முறையாக பாகிஸ்தான் ஆதரவு யூ-டியூப் சேனல்களை முடக்கி மத்திய அரசு அதிரடி

முதல்முறையாக பாகிஸ்தான் ஆதரவு யூ-டியூப் சேனல்களை முடக்கி மத்திய அரசு அதிரடி

You tube

You tube

முடக்கப்பட்ட 15 யூடியூப் சேனல்களில் 15 சேனல்கள் நயா பாகிஸ்தான் எனும் இயக்கத்துக்கு சொந்தமானவை.

    புதிய தகவல் தொழில்நுட்ப 2021 சட்டத்தை பயன்படுத்தி முதல் முறையாக தேச விரோத செயல்பாட்டினை கொண்டிருந்த 20 யூடியூப் சேனல்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன், பாகிஸ்தானைச் சேர்ந்த சில யூடியூப் சேனல்கள், இணையதளங்கள் இந்தியாவுக்கு எதிரான பொய் செய்திகளை பரப்பி வந்தது மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்தது. குறிப்பிட்ட சில யூடியூப் சேனல்களை கண்காணித்த போது அவை விவசாயிகள் போராட்டம், காஷ்மீர் விவகாரம், அயோத்தி, ஜெனரல் பிபின் ராவத் மறைவு போன்ற பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிரான அடிப்படை ஆதாரமற்ற பொய் செய்திகளை பரப்பி வந்தது கண்டறியப்பட்டது.

    இதனையடுத்து தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலர் அபூர்வ சந்திரா இது குறித்து யூடியூப் மற்றும் தொலைத்தொடர்பு அமைசகத்திற்கு கடிதம் எழுதினார். அதில் மேற்கண்ட யூடியூப் சேனல்கள் இந்திய இறையாண்மை எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்த விசாரணையின் அடிப்படையில் அந்த யூடியூப் சேனல்கள் மற்றும் சில வெப்சைட்களை உடனடியாக முடக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க:  இந்த வங்கியில் 10,000க்கு மேல் வரவு வைத்தாலே இனி கட்டணம் வசூல் - 2022 ஜனவரி 1 முதல் புதிய விதி அமல்!

    முற்றிலும் ரகசியமான இந்த நடவடிக்கைகைகளின் அங்கமாக தற்போது தேச விரோத நடவடிக்கைகளுக்கு காரணமாக இருந்த 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு வெப்சைட்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் புதிதாக கொண்டு வரப்பட்டிருக்கும் 2021 தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் சிறப்பு அதிகாரத்தை கொண்டு இந்த முடக்க நடக்கவடிக்கை முதல் முறையாக எடுக்கப்பட்டிருக்கிறது.

    புலனாய்வு அமைப்புகளின் ரகசிய விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் இந்த யூடியூப் சேனல்களில் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பரப்பப்படுவதுடன், தேசிய பாதுகாப்பில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது என தெரியவந்தது.

    இதையும் படிங்க:   ஆசியாவுடன் கடலுக்கடியிலான ஃபைபர்-ஆப்டிக் கேபிள் சிஸ்டம் - கூகுள், மெட்டாவிற்கு அமெரிக்கா ஆதரவு

    முடக்கப்பட்ட 15 யூடியூப் சேனல்களில் 15 சேனல்கள் நயா பாகிஸ்தான் எனும் இயக்கத்துக்கு சொந்தமானவை. The naked truth, 48 news, Junaid Halim official போன்றவை முடக்கப்பட்ட சேனல்களில் குறிப்பிடத்தகுந்தவை. 3.5 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் கொண்ட ஒரு முடக்கப்பட்ட சேனலில் இருந்த தேச விரோதமான வீடியோக்களின் மொத்த பார்வைகள் 500 மில்லியன் ஆக இருந்ததாக தெரியவந்துள்ளது.

    விவசாயிகள் போராட்டத்தினை தவறான பாதையில் திசைதிருப்பும் வகையிலான கண்டெண்ட்கள் இந்த சேனல்கள் மூலம் பரப்பப்பட்டதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

     
    Published by:Arun
    First published:

    Tags: Pakistan News in Tamil, Youtube

    அடுத்த செய்தி