மக்களைக் கண்காணிக்க சமூக வலைதளங்களே அரசுக்கு உதவுகின்றன..!- மனித உரிமை அமைப்பு

31 நாடுகளில் ஆன்லைன் செயல்பாடுகளால் வன்முறைச் சம்பவங்களுக்கு இரையானோர் பலர் என்கிறது இந்த ஆய்வு.

மக்களைக் கண்காணிக்க சமூக வலைதளங்களே அரசுக்கு உதவுகின்றன..!- மனித உரிமை அமைப்பு
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: November 5, 2019, 7:21 PM IST
  • Share this:
மக்களைக் கண்காணிக்க உலக நாடுகள் பலவும் சமூக வலைதளங்களையே பயன்படுத்துவதாக தனியார் மனித உரிமை அமைப்பு ஒன்றின் ஆய்வு தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்துக்குக் கெடுதல் விளைவிக்கும் வகையில் உலக நாடுகளின் பல அரசுகள் செயல்படுவதாக இந்த மனித உரிமை அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது. காரணம், அரசின் பாதுகாப்பு, தேர்தல் கையாளும் முறை என அத்தனைக்கும் மக்களின் நாடித்துடிப்பை அறிந்துகொள்ள அரசுகள் மக்களின் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.

சுமார் 65 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளை தன்னார்வ அமைப்பான ‘ஃபீரிடம் ஹவுஸ்’ வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலில், ‘தேர்தலில் மக்களைக் கவர சமூக வலைதளங்களைப் பல அரசுகள் பயன்படுத்துகின்றன. மனிதத்தையே மாற்றும் வழிவகைகளே அரசுகள் இந்த சமூக வலைதளங்கள் மூலம் கையாளுகின்றன.


அரசுக்கு எதிராக செயல்படுவோரையும் சமூக வலைதளங்கள் மூலமாகவே அறிந்து நடவடிக்கையும் எடுக்கின்றன அரசுகள். 65 நாடுகளில் 47 நாடுகள் அரசியல், சமூகம் அல்லது மதம் சார்ந்து செயல்படுவோரை அரசுகள் கைது செய்துள்ளன. 31 நாடுகளில் ஆன்லைன் செயல்பாடுகளால் வன்முறைச் சம்பவங்களுக்கு இரையானோர் பலர் என்கிறது இந்த ஆய்வு.

மேலும் பார்க்க: ’உணவுக் கலையின் நகரம்’... இந்திய நகரத்துக்கு யுனெஸ்கோ சிறப்பு அங்கீகாரம்!

ஆட்சியர் என்றால் சரவணபவன் ஓட்டல் சப்ளையர் நினைப்பா?
First published: November 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்