Home /News /international /

கோத்தபய ராஜபக்ச இலங்கையில் இருந்து தனது மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பிச்சென்றார்!

கோத்தபய ராஜபக்ச இலங்கையில் இருந்து தனது மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பிச்சென்றார்!

கோத்தபய ராஜபக்ச (கோப்பு படம்)

கோத்தபய ராஜபக்ச (கோப்பு படம்)

Sri Lanka : இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்ச இன்று விலகுகிறார். இந்நிலையில் விமானப்படை விமானம் மூலம், மாலத்தீவுக்கு தனது மனைவியுடன் சென்றடைந்தார்.

  இலங்கையில் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்ச விலக வலியுறுத்தி, அவரது மாளிகையை முற்றுகையிட்டு கடந்த சனிக்கிழமை முதல் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையறிந்து முன்னதாகவே அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய வெளியேறினார்.

  இதையடுத்து, அதிபர் பதவியிலிருந்து இன்று விலகுவதாக கோத்தபயவும், பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்க-வும் அறிவித்தனர். எனினும், பதவிவிலகும் வரை, அதிபர் மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

  பதவிவிலகல் கடிதத்தில் அதிபர் நேற்று முன்தினமே கையெழுத்திட்டதாகவும், இதனை அதிகாரிகள், சபாநாயகரிடம் இன்று ஒப்படைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த முறைப்படியான அறிவிப்பை சபாநாயகர் வெளியிட உள்ளார்.

  நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை மறுதினம் தொடங்குகிறது. புதிய அதிபருக்கான தேர்தல் 20-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அதிபர் தேர்வுசெய்யப்படும் வரை, இடைக்கால அதிபராக ரணில் விக்மரசிங்கே செயல்படுவார் என்று கூறப்படுகிறது. அதிபர் பதவிக்கான மனுக்களை 19-ம் தேதிவரை அளிக்கலாம் என்ற நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் சஜித் பிரேமதாஸாவை நிறுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

  இதனிடையே, விசா வழங்குமாறு கோத்தபய விடுத்த கோரிக்கையை அமெரிக்கா அண்மையில் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், துபாய் செல்வதற்காக நேற்று முன்தினம் மாலை விமான நிலையம் வந்த நிலையில், அவரை பொதுமக்கள் செல்லும் வழியில் செல்லுமாறு குடியேற்றத் துறை அதிகாரிகள் கூறியதால், அவரால் வெளிநாடு தப்பிச் செல்ல முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதிபரைத் தடுக்கும் அதிகாரம் குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கு கிடையாது என்று குடியேற்றத் துறை அதிகாரிகள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த சூழலில் சமையல் எரிவாயுவைப் பெறுவதற்காக பொதுமக்கள் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோலுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், சைக்கிள்களைப் பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

  மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ள இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார். நெருக்கடிக்கு மத்தியில் 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை இலங்கைக்கு இந்தியா அனுப்பிவைத்ததாகவும் கூறப்படுகிறது.

  Must Read : ‘அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை’ - பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோவால் சர்ச்சை

  இந்நிலையில், சிறப்பு விமானப்படை விமானம் மூலம் அதிபர் கோத்தபய ராஜபக்ச, இன்று அதிகாலை மாலத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றார். கொழும்புவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் கோத்தபய ராஜபக்ச, அவரது மனைவி, மெய்க்காவலர் உள்ளிட்ட 4 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

  மாலத்தீவில் தரையிறங்க அனுமதிக்கப்படுமா என்ற குழப்பத்தின் காரணமாக, விமான நிலையத்திலேயே விமானம் ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதன்பின்னர், அனுமதி கிடைத்தவுடன் புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
  Published by:Suresh V
  First published:

  Tags: Gotabaya Rajapaksa, Sri Lanka, Srilanka

  அடுத்த செய்தி