இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் தப்பிச்செல்வதற்காக மாலத்தீவில் காத்துக்கொண்டிருக்கிறார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார சூழல் காரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்தனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வலியுறுத்தி கடந்த வாரம் மீண்டும் போராட்டம் தீவிரமடைந்தது.
மக்கள் புரட்சி காரணமாக அதிபர் பதவியை ராஜினாமா செய்யபோவதாக அறிவித்த கோத்தபய ராஜபக்ச நேற்று அதிகாலை ராணுவ விமானம் மூலம் தனது மனைவி மற்றும் பாதுகாவலர்களுடன் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார்.
இந்தியா, துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்ல ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தை தவறவிட்டதாகவும். அவர் அந்த விமானத்தில் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் தப்பிச் செல்ல இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நேற்றிரவு முதல் காத்திருக்கிறார்.
தற்போது தனி ஜெட் விமானம் இயக்குவது தொடர்பாக சிங்கப்பூர் அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றிரவு அவரும், அவரது மனைவியும் புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அது தாமதமாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gotabaya Rajapaksa, Maldives, Rajapakse, Singapore, Srilanka