கோத்தபய ராஜபக்ச முன்னிலை...! இறுதிமுடிவுகள் மாலை வெளியாகும் என்று தேர்தல் ஆணையர் அறிவிப்பு

கோத்தபய ராஜபக்ச (Reuters)

Srilanka President Election |

 • News18
 • Last Updated :
 • Share this:
  இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், கோத்தபய ராஜபக்ச முன்னிலை பெற்றுள்ளார்.

  இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச-வுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா-வுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது.

  வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கிய நிலையில், தமிழர்கள் பகுதியில் சஜித் பிரேமதாசா அதிக ஓட்டுகளை பெற்றிருந்தார். அதேபோல, சிங்களவர்கள் பகுதியில் கோத்தபய அதிக ஓட்டுகளை பெற்றிருந்தார்.

  தற்போது வரை, கோத்தபய 48.45 சதவிகித வாக்குகளும், சஜித் 45.15 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளனர்.

  யார் வெற்றி என்று தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், தான் வெற்றி பெற்றுள்ளதாக கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
  அவரது கட்சி கொண்டாட்டங்களில் ஈடுபட தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

  இன்று மாலை 4 மணிக்குள் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

   

   
  Published by:Sankar
  First published: