முகப்பு /செய்தி /உலகம் / வேலையை இழந்த நிமிடங்கள்.. கண்ணீருடன் பகிர்ந்த கூகுள் முன்னாள் ஊழியர்..!

வேலையை இழந்த நிமிடங்கள்.. கண்ணீருடன் பகிர்ந்த கூகுள் முன்னாள் ஊழியர்..!

கண்ணீருடன் பகிர்ந்த பெண்

கண்ணீருடன் பகிர்ந்த பெண்

கூகுள் நிறுவனத்தில் வேலையிழந்த பெண் பொறியாளர், பணி நீக்கத்தின் கடைசி நாள் நிகழ்வுகளை கண்ணீர் மல்க வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • internati, Indiaamericaamerica

பிரபல முன்னணி நிறுவனமான கூகுள், சுமார் 12 ஆயிரம் ஊழியர்களை அண்மையில் பணி நீக்கம் செய்தது. இதில் பாதிக்கப்பட்ட பெண் பொறியாளரான நிகோலி சாய் என்பவர், பணி நீக்கத்தன்று நிகழ்ந்த நேரலைகளை கண்ணீர் மல்க டிக்டோக் வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ளார். காலையில் கண் விழித்ததும், தனது உயரதிகாரியிடம் இருந்து பணி நீக்க குறுஞ்செய்தி வந்ததாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து வழக்கமாக அவர் பயன்படுத்திய மடிக்கணினியின் அனுமதி மறுப்பு செய்தியும், பணி நீக்கத்தை உறுதிப்படுத்தியது.கனவு நிறுவனமான கூகுளில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர், செய்வதறியாது கண்ணீர் வடித்துள்ளார். கண்ணீருக்கு கனம் சேர்க்கும் விதமாக, அவரது முன்னாள் சக ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்ட தகவலை சமூக வலைதளம் மூலம் அப்பெண் அறிந்துள்ளார்.

கூகுளில் பணியாற்ற வேண்டும் என்பதே ஏராளமான மென்பொறியாளர்களின் கனவாகும். ஆனால், கூகுளில் இருந்தே பணி நீக்கம் செய்ததை, கனவிலும் நம்ப முடியவில்லை என்று வேலையிழந்த ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Google