• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றி அமைத்த ஸ்மார்ட் லென்ஸ் - விட்கர்லேவை கௌரவித்த கூகுள்!

கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றி அமைத்த ஸ்மார்ட் லென்ஸ் - விட்கர்லேவை கௌரவித்த கூகுள்!

விட்கர்லேவை கௌரவித்த கூகுள்

விட்கர்லேவை கௌரவித்த கூகுள்

விக்டர்லேவின் ஸ்மார்ட் பயோ மெட்டீரியல் இன்றைய நவீன மருத்துவ உலகில் ஆராய்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும், திருப்புமுனைக்கும் வழிவகுத்துள்ளது.

  • Share this:
இன்றைய கூகுள் டூடுல் என்ன என்று ஒவ்வொரு நாளும் கூகுள் முகப்புப்பக்கத்தில் தேடும் அளவுக்கு கூகுள் நிறுவனத்தின் டூடுல்கள் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த உலகத்தில் பலருடைய பார்வைக்கும் உதவியாக இருந்து வரும், மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனைகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் ஆணிவேராக இருக்கும் ஸ்மார்ட் லென்ஸ் கண்டுபிடிப்பாளரின் பிறந்த நாள் இன்று. அதனைக் கொண்டாடும் வகையில் கூகுள் ஒரு ஸ்பெஷல் டூடுலை உருவாக்கியுள்ளது.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த நிபுணர்களை, கலைஞர்களை, ஆய்வாளர்களை கௌரவிக்கும் வகையில் கூகுள் டூடுல்களை வெளியிடுகிறது. ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ் கண்டுபிடிப்பாளரான ஓட்டோ விக்டர்லேவின் 108வது பிறந்தநாளுக்கான டூடுல் வெளியிட்டுள்ளது கூகுள். ஓட்டோ விக்டர்லே செக் நாட்டை சேர்ந்த வேதியியலாளர். தற்போது நாம் அனைவரும் பயன்படுத்தி வரும் ஸாஃபட் கான்டாக்ட் லென்ஸின் கண்டுபிடிப்பாளர் விட்கர்லே.

ஓட்டோ விக்டர்லே, செக் ரிபப்ளிக் நாட்டில் உள்ள ப்ராஸ்டேஜாவ் என்ற நகரில் 1913ம் ஆண்டு பிறந்தார். இளம் வயதிலேயே இவருக்கு அறிவியல் மீது மிகப்பெரிய ஆர்வமும் ஈடுபாடும் இருந்தது. அறிவியல் துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்ட விக்டர்லே, 1936 ஆம் ஆண்டு, ப்ராக் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜியில் இருந்து ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில், முனைவர் பட்டம் பெற்றார். அவர் படித்த கல்வி நிறுவனத்திலேயே பேராசிரியராக பணியாற்றி வந்த விக்டர்லே, 1950 ஆம் ஆண்டில், ஐ இம்பிளாண்ட்களுக்கான (eye implants) ஒரு உறிஞ்சும் தன்மை கொண்ட, டிரான்ஸ்பரன்ட்டான ஒரு ஜெல்லை உருவாக்கினார்.

விக்டர்லேவின் ஸ்மார்ட் பயோ மெட்டீரியல் இன்றைய நவீன மருத்துவ உலகில் ஆராய்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும், திருப்புமுனைக்கும் வழிவகுத்துள்ளது. எனவே, இந்த கண்டுபிடிப்பை பாராட்டும் மரியாதை செலுத்தும் வகையில் கூகுள் ஸ்மார்ட் லென்ஸ் டூடுலை வெளியிட்டுள்ளது.

இவரின் கண்டுபிடிப்பில் பயன்படுத்தப்படும் ‘ஸ்மார்ட்’ பயோ மெட்டீரியல்ஸ் மருத்துவத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கும் உதவியாக இருக்கின்றது. தொழில்நுட்பத்தோடு கைகோர்த்து மருத்துவ சேவைகள் முன்னேறி வரும் நிலையில், இந்த பயோ மெட்டீரியல் மனிதர்களின் கனக்டிவ் திசுக்கள் மீண்டும்

தன்னுடைய பார்வை குறைபாட்டை சரி செய்ய கண்ணாடி அணிந்த விக்டர்லே, குழந்தையின் எரக்டர் செட், சைக்கிளின் லைட் பேட்டரி, ஒரு ஃபோனோகிராப் மோட்டார் மற்றும் அவரே தயாரித்து ஒரு கண்ணாடி டியூப் மற்றும் மொல்டுகளை வைத்து, ஸாஃபட் காண்டாக்ட் லென்ஸ்களை உருவாக்கினார்.

Also read... iPad வாங்க போறீங்களா? இதைப் படியுங்கள்!

ஆர்கானிக் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும், இவர் வாழ்நாள் முழுவதும் ஆய்வாளராக இருந்தார். அது மட்டுமின்றி பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு உரிமையாளரும் கூட. இன்று உலகெங்கும், 14 கோடி மக்கள் பார்வை குறைபாட்டுக்கு தீர்வாக இவரின் நவீன காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துகிறார்கள்.

செக் குடியரசு அமைச்சகம், தனது அதிகாரபூர்வமான டிவிட்டர் கணக்கில், ஓட்டோ விக்டர்லே பற்றி பதிவு செய்துள்ளது.



கூகுள் உருவாக்கியுள்ள டூடுலில், விக்டர்லே, ஒரு கான்டாக்ட் லென்ஸை தன்னுடைய விரல் நுனியில் வைத்திருப்பதைப் போலவும், அதிலிருந்து ஒளி பிரதிபலித்து, பின்னணியில் கூகுள் லோகோ இருப்பது போலவும் வடிவமைத்துள்ளது. விக்டர்லேவின் கான்டாக்ட் லென்ஸ் பலருக்கும் ஒளியை வழங்கியுள்ளது என்பதை கலைநயத்தோடு வடிவமைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: