முகப்பு /செய்தி /உலகம் / ஸ்டெஃபேனியா மெராசினானுவின் 140வது பிறந்தநாள்.. கவுரவப்படுத்திய கூகுள் டூடுல்

ஸ்டெஃபேனியா மெராசினானுவின் 140வது பிறந்தநாள்.. கவுரவப்படுத்திய கூகுள் டூடுல்

ஸ்டெஃபேனியா மெராசினானு

ஸ்டெஃபேனியா மெராசினானு

Ștefania Mărăcineanu : நிலநடுக்கத்திற்கு வழிவகுக்கும் பூமியின் மையத்தில் கதிரியக்கத்தில்  குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :

இன்டர்நெட் ஜாம்பவானான கூகுள் ருமேனிய இயற்பியலாளர் ஸ்டெஃபேனியா மெராசினானுவின் 140வது பிறந்தநாளை டூடுலுடன் கொண்டாடுகிறது. கதிரியக்கத்தின் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியில் முன்னோடியாக இருந்த பெண்களில் மெராசினியானுவும் ஒருவர். 

ஸ்டெஃபேனியா மெராசினா ஜூன்  18, 1882 இல் ரோமானிய நாட்டில் புக்கரெஸ்டில் பிறந்தார். அவர் 1910 இல் இயற்பியல் மற்றும் வேதியியல் அறிவியல் பட்டம் பெற்றார். புக்கரெஸ்டில் உள்ள பெண்களுக்கான மத்திய பள்ளியில் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு இருந்தபோது,ரோமானிய அறிவியல் அமைச்சகத்திடம் இருந்து உதவித்தொகை பெற்றார். பாரிஸில் உள்ள ரேடியம் நிறுவனத்தில் ஆராய்ச்சியைத் தொடர முடிவு செய்தார்.

அப்போது இயற்பியலாளர் மேரி கியூரியின் ரேடியம் நிறுவனம், கதிரியக்க ஆய்வுக்கான உலகளாவிய மையமாக மாறிக் கொண்டிருந்தது. கியூரி கண்டுபிடித்த ஒரு தனிமமான பொலோனியம் குறித்த தனது PhD ஆய்வறிக்கையில் மெராசினானு பணியாற்றத் தொடங்கினார்.

ர்யுகு சிறுகோளில் உயிர்களுக்கான சாத்தியக்கூறு! -ஜாக்ஸா ஆய்வு

பொலோனியத்தின் அரை-வாழ்க்கை(half life) பற்றிய தனது ஆராய்ச்சியின் போது, ​​அரை-வாழ்க்கைத் தன்மை அது வைக்கப்பட்ட உலோகத்தின் வகையைச் சார்ந்ததாகத் தோன்றியதை மெராசினானு கவனித்தார். பொலோனியத்தில் இருந்து ஆல்பா கதிர்கள் உலோகத்தின் சில அணுக்களை கதிரியக்க ஐசோடோப்புகளாக மாற்றியது ஆச்சரியமாக இருந்தது. அவரது ஆராய்ச்சி செயற்கை கதிரியக்கத்தின் முதல் எடுத்துக்காட்டாக அமைந்தது.

மெராசினானு இயற்பியலில் தனது PhD ஐ முடிக்க பாரிஸில் உள்ள Sorbonne பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், இரண்டே ஆண்டுகளில் முனைவர் பட்டமும் பெற்றார்! மியூடனில் உள்ள வானியல் ஆய்வகத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, அவர் ரோமேனியாவுக்குத் திரும்பினார். கதிரியக்க ஆய்வுக்கான தனது முதல் ஆய்வகத்தை நிறுவினார்.

அங்கு மெராசினானு தனது நேரத்தை செயற்கை மழையைப் பற்றி  ஆராய்வதற்காக அர்ப்பணித்தார். அதில் அவரது முடிவுகளை சோதிக்க அல்ஜீரியாவிற்கு ஒரு பயணம் செய்தார். பூகம்பங்களுக்கும் மழைப்பொழிவுக்கும் உள்ள தொடர்பை அவர் ஆய்வு செய்தார், நிலநடுக்கத்திற்கு வழிவகுக்கும் பூமியின் மையத்தில் கதிரியக்கத்தில்  குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

1935 ஆம் ஆண்டில், மேரி கியூரியின் மகள் ஐரீன் கியூரி மற்றும் அவரது கணவர் செயற்கை கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக கூட்டு நோபல் பரிசைப் பெற்றனர். மெராசினானு நோபல் பரிசுக்கு போட்டியிடவில்லை, ஆனால் கண்டுபிடிப்பில் அவரது பங்கு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கேட்டார். 1936 ஆம் ஆண்டில் ருமேனியாவின் அகாடமி ஆஃப் சயின்சஸ் மூலம் மெராசினேனுவின் பணி அங்கீகரிக்கப்பட்டது. அங்கு அவர் ஆராய்ச்சி இயக்குநராக பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் கண்டுபிடிப்புக்கான உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறவில்லை.

First published:

Tags: Chemistry, Physics, Research, Science