முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர்கள் மட்டும் அவர்களின் நிறுவன வளாகங்களுக்கு பணிக்கு திரும்பலாம் என்று ‘டெக்-ஜாம்பவான்’ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். கூகுள் ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு அழைப்பதில் தாமதம் ஏற்பட்டதையும் அந்நிறுவனம் ஏற்கெனவே உறுதிப்படுத்தி இருந்தது.
கூகுள் நிறுவனம் தங்களது ஊழியர்களை அக்டோபர் 18 வரை வீட்டிலிருந்து பணிப்புரிய அனுமதித்துள்ளது. இதுகுறித்து, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தங்கள் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலானது கூகுள் ப்ளாகில் பதிவிடப்பட்டுள்ளது.
சுந்தர் பிச்சை இ-மெயில்:
நீங்கள் அனைவரும் உங்கள் உடல்நலனை நன்றாக கவனித்து வருகிறீர்கள் என நம்புகிறேன். பெருந்தொற்று காலத்தின் தொடக்கத்திலிருந்து, நம் நிறுவன ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டிருக்கிறோம். நம் வாடிக்கையாளர்களையும் பங்குதாரர்களின் நலனையும் உங்கள் நலனுடன் சேர்த்து கவனத்தில் கொண்டு, 200க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை உருவாக்கி, இந்த கடினமான நேரத்தில் மக்கள் மற்றும் வணிகங்களுக்கு சென்று சேர உதவுகிறோம்.
மேலும், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நிறுவனத்தின் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியும் ஆரம்பக்கட்ட முடிவை முதன்முதலில் எடுத்தோம். அப்போதிலிருந்து, தங்கள் அன்புக்குரியவர்களைப் பராமரிக்க நம் ஊழியர்களுக்கு உதவும் வகையில் கேரர்ஸ் லீவ் கவரேஜ் வழங்கியுள்ளோம். உலகின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தடுப்பூசிகள் பரவலாகக் கிடைக்கக்கூடிய பகுதிகளில் நம் கூகுள் நிறுவன ஊழியர்களிடையே மிக அதிகமான தடுப்பூசி செலுத்திக்கொண்ட விகிதத்தைக் காண்பது ஊக்கமளிக்கிறது. இவ்வூக்கமானது, அலுவலகங்களுக்கு விரைவில் திரும்பிவர விரும்பும் ஊழியர்களுக்கு அலுவலகங்களைத் திறக்க வசதியாக இருந்ததற்கு இது ஒரு பெரிய காரணம்.
Must Read | குவாட் குழு முதல் அமெரிக்க தடுப்பூசிகள் வரை... அமெரிக்க வெளியுறவு செயலாளரின் பிரத்யேக பேட்டி!
தடுப்பூசி செலுத்திக்கொள்வது என்பது வரும் நாட்களில் நம்மையும் நம் நிறுவனங்களைச் சார்ந்த ஊழியர்களின் உடல்நலனையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் மிக முக்கியமான வழிகளில் ஒன்றாகும். இதன் மூலம் நான் இரு முக்கிய விஷயங்களை உறுதிப்படுத்த விரும்புகிறேன். முதலில், நம் நிறுவனத்தில் வளாகங்களின் பணிக்கு திரும்பும் ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
இரண்டாவதாக, நம் நிறுவனங்களில் பணிப்புரியும் அனைத்து ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து பணிபுரியும் கொள்கையை வரும் அக்டோபர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கிறோம்.
ஒருபக்கம் கொரோனா சற்றே குறையும் சூழலில், சில இடங்களில் டெல்டா வேரியண்ட் பரவுவதால் நம் நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரால் அலுவலகம் திரும்புவது சற்றே கடினமான ஒன்று. அக்டோபர் வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் கால அவகாசமானது நம் ஊழியர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப உதவியாக இருக்கும். இருப்பினும், கொரோனா சூழலை தீவிரமாக கண்காணித்து 30 நாட்களுக்கு முன்னரே அனைத்து ஊழியர்களுக்கும் அலுவலகம் திரும்புவது குறித்து தகவல் தெரிவிக்கப்படும். மேலும், கடினமான அல்லது முக்கியமான சூழ்நிலையில் இருக்கும் ஊழியர்களுக்கு 2021ஆம் ஆண்டின் இறுதிவரை வீட்டிலிருந்து பணிப்புரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அலுவலகங்கள் திறக்கப்படும் நேரத்தில் ஊழியர்களுக்கு மன நிம்மதியை அளிக்கும் என நம்புகிறேன். கடந்த சில வாரங்களாக நம் ஊழியர்களை அலுவலகங்களில் காண்பது எனக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இப்படி புத்துணர்ச்சியான நாட்களை நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Covid-19, Covid-19 vaccine, Google, Sundar pichai