கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு ‘குளோபல் லீடர்ஷிப்’ விருது!

வாஷிங்டனில் இருந்து செயல்படும் யூ.எஸ்.ஐ.பி.சி. எனப்படும் அமெரிக்க இந்திய வர்த்தக சபை க்ளோபல் லீடர்ஷிப் விருது எனப்படும் இந்த விருதை வழங்குகிறது.

Web Desk | news18
Updated: June 6, 2019, 11:17 AM IST
கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு ‘குளோபல் லீடர்ஷிப்’ விருது!
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை
Web Desk | news18
Updated: June 6, 2019, 11:17 AM IST
சர்வதேச அளவில் தலைமைத்துவ பண்புக்காக வழங்கப்படும் விருதுக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக ரீதியாக சிறப்பான பங்காற்றும் அமெரிக்க மற்றும் இந்திய பெரு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு வாஷிங்டனில் இருந்து செயல்படும் யூ.எஸ்.ஐ.பி.சி. எனப்படும் அமெரிக்க இந்திய வர்த்தக சபை க்ளோபல் லீடர்ஷிப் விருது எனப்படும் இந்த விருதை வழங்குகிறது.

இது கடந்த 2007-ம் ஆண்டு முதல் குளோபல் லீடர் ஷிப் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான விருதை, அடுத்த வாரம் நடைபெற உள்ள அந்த அமைப்பின் மாநாட்டில் வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுக்கு கூகுள் தலைமைச் செயலதிகாரியும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சுந்தர் பிச்சை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவருடன் அமெரிக்க பங்குச்சந்தையின் நாஸ்டாக் அமைப்பின் தலைவரான அடேனா ஃப்ரைடா மேனும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... ஊருல குடிநீர் வசதி இல்லாததால், திருமணத்திற்கு பெண் கொடுக்க மறுப்பு

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...