46-வது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுளின் சுந்தர் பிச்சை

news18
Updated: July 12, 2018, 6:15 PM IST
46-வது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுளின் சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை
news18
Updated: July 12, 2018, 6:15 PM IST
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழரான சுந்தர் பிச்சை இன்று தனது 46-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். 

தமிழனாய் பிறந்து மென்பொருள் துறையில் தனக்கிருந்த ஆர்வத்தாலும், கடின உழைப்பாலும் நவீன உலகின் தவிர்க்க முடியாத கூகுள் நிறுவனத்தின் உயரிய பொறுப்பை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சுந்தர் பிச்சைக்கு இன்று வயது 46.

தமிழகத்தில் பிறந்து வளர்ந்த சுந்தர் பிச்சை, சென்னையில் தனது  பள்ளிப்படிப்பை முடித்தபின், காரக்பூரில் உள்ள ஐஐடி-யில் உலோகவியல் பொறியியல் படிப்பை முடித்தார்.

தொடர்ந்து, அவர் அமெரிக்க ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். படிப்பையும்,  பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தார். பின்னர்,  2004-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை பணியில் சேர்ந்தார்.

கூகுள் குரோம், மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆன்ட்ராய்டு போன்ற செயலிகளை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர் சுந்தர் பிச்சை. மேலும் கூகுள் சேர்ச், கூகுள் மேப், யூ-டியூப் போன்ற அந்த நிறுவனத்தின் பல தயாரிப்புகளில் சிறப்பாக பங்காற்றி, கூகுள் நிறுவனத்தின் முக்கியமான உயர் பொறுப்புகளிலும் நியமிக்கப்பட்டார்.

மென்பொருள் துறையின் அடுத்தடுத்த பரிணாமங்களைத் துல்லியமாகக் கணித்து, வாடிக்கையாளர்களுக்குக் கணினி வழி செயல்பாடுகளை எளிதாக்கியவர் சுந்தர் பிச்சை. 2015-ஆம் ஆண்டு, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை  நியமிக்கப்பட்டார். தற்போதுவரை அந்தப் பொறுப்பில் அவர் திறம்பட செயல்பட்டு வருகிறார்.

கூகுள் நிறுவனத் தலைமைப் பொறுப்புக்கு சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்ட பின்னர், அந்த நிறுவனத்தின் வளர்ச்சி வேகம் பெற்றுள்ளது. மேலும், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...