Home /News /international /

வொர்க் ஃப்ரம் ஹோம்-க்கு குட்பை.. ஊழியர்களை ஆபீஸ்-க்கு அழைக்கும் கூகுள்

வொர்க் ஃப்ரம் ஹோம்-க்கு குட்பை.. ஊழியர்களை ஆபீஸ்-க்கு அழைக்கும் கூகுள்

கூகுள் கணக்கில் லாகின் செய்வதில் மாற்றங்கள்

கூகுள் கணக்கில் லாகின் செய்வதில் மாற்றங்கள்

Google Employees | தடுப்பு மற்றும் கொரோனா நோய் சிகிச்சையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் சரிவு ஆகியவற்றின் காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுழற்சி முறையில் ஊழியர்கள் பணி செய்யும் வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
கொரோனா வைரஸ் உருவாகியதில் இருந்தே நமது வாழ்க்கை முறை முற்றிலுமாக மாறி விட்டது. குறிப்பாக வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. வெளியில் சென்று வேலைக்கு செல்ல வேண்டிய அவசியமும் இந்த இரண்டு வருடங்களாக இல்லை. இதற்கு மாறாக வீட்டில் இருந்த படியே எல்லா வேலைகளையும் செய்து வந்திருந்தோம். அலுவலக நேரத்தை தாண்டியும் வேலை செய்தாக வேண்டி இருந்தது. பலர் 12 மணி நேரத்திற்கும் மேலாக இந்த கால கட்டத்தில் வேலை செய்து வந்தனர். இதனாலேயே பலருக்கு ஆபீஸ் சென்று வேலை செய்தாக வேண்டும் என்கிற உணர்வு இருந்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் கொரோனா இரண்டாம் அலை குறைந்த நிலையில் சில அலுவலகங்கள் பழைய படி திறக்கப்பட்டது. ஆனால், மூன்றாம் அலை வந்ததால் மீண்டும் அலுவலகங்கள் மூடப்பட்டது. இந்நிலையில் கூகுள் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி இடங்களுக்கு வர சொல்லி அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் இருந்து அலுவலகத்திற்கு சென்று வேலை செய்தாக வேண்டி இருக்கும் என்று கூகுளின் உலகளாவிய நன்மைகளின் துணைத் தலைவரான ஜான் கேசி அவர்கள் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். 2 வருடங்களாக வீட்டிலேயே முடங்கி இருந்த பலருக்கும் இது இனிப்பான செய்தியாக இருக்கிறது.

தடுப்பு மற்றும் கொரோனா நோய் சிகிச்சையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் சரிவு ஆகியவற்றின் காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுழற்சி முறையில் ஊழியர்கள் பணி செய்யும் வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி வார நாட்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஊழியர்கள் வர வேண்டி இருக்கும். மேலும் 3 நாட்கள் அலுவலகத்தில் வேலை செய்யவும் மற்ற 2 நாட்கள் வீட்டில் இருந்து கொண்டே வேலை செய்யவும் வழி செய்யப்பட உள்ளது.



கஃபேக்கள், உணவகங்கள், பார்லர்கள் மற்றும் விளையாட்டு அரங்கங்கள் போன்ற வசதிகளை மீண்டும் திறப்பது போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்து வருதல் மற்றும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்களை சோதனை செய்தல் போன்ற முன்னரே அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களையும் பின்பற்ற உள்ளதாக கேசி கூறியுள்ளார். அதே போன்று அலுவலகத்திற்கு வர கூடிய ஊழியர்களுக்கு எல்லா நாளும் பரிசோதனை நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை புதிய முறையில் கொண்டு வர உள்ளனர்.

Also Read : இண்டர்வியூக்கு வருபவர்களிடம் கூகுள் எப்படி கேள்வி கேட்கும் தெரியுமா?

ஊழியர்களை எப்போதெல்லாம் பணி இடங்களுக்கு வரும்படி அழைப்பு வருகிறதோ அதை தொடர்ந்தே புதிய கொரோனா அலையும் கடந்த காலங்களில் வந்த வண்ணம் இருந்தது. இந்த முறை அது போன்று எதுவும் நடக்காமல் இருந்தால் எல்லா ஊழியர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். இல்லையேல் கடந்த 2 ஆண்டுகளை போன்றே இந்த முறையும் வீட்டில் இருந்தே மணி கணக்கில் வேலை பார்த்தாக வேண்டி இருக்கும். என்ன நடக்க போகிறது என்பதை சில மாதங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
Published by:Selvi M
First published:

Tags: Google, Work From Home

அடுத்த செய்தி