அதிரும் விலையில் ’புல்லட்-ப்ரூஃப்’ தங்க டாய்லெட்டை அறிமுகம் செய்த சீனர்கள்..!

பார்வையாளர்கள் காண சீனாவின் ஷாங்காய் கண்காட்சியில் இந்த டாய்லெட் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிரும் விலையில் ’புல்லட்-ப்ரூஃப்’ தங்க டாய்லெட்டை அறிமுகம் செய்த சீனர்கள்..!
தங்க டாய்லெட்(Twitter/@PDChina)
  • News18
  • Last Updated: November 7, 2019, 4:11 PM IST
  • Share this:
சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான டாய்லெட்டை சீனா அறிமுகம் செய்துள்ளது.

முற்றிலும் தங்கத்தால் ஆன இந்த டாய்லெட்டின் அமரும் பகுதி முழுக்க வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதிக மதிப்புள்ள டாய்லெட் என்ற பெருமையையும் பெற்றுள்ள இந்த டாய்லெட் தற்போது கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

தங்கத்தால் ஆனது மட்டுமல்லாமல் புல்லட்-ப்ரூஃப் எனப்படும் குண்டு துளைக்காத அமரும் இடத்தில் சுமார் 40 ஆயிரம் வைரக் கற்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனது மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8,50,89,000 ரூபாய். பார்வையாளர்கள் காண சீனாவின் ஷாங்காய் கண்காட்சியில் இந்த டாய்லெட் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


இதே கண்காட்சியில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள கிடார் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இதில் வெள்ளைத் தங்கம் மற்றும் 400 கேரட் வைரக் கற்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தங்க-வைர டாய்லெட் அனுபவம் எப்படி இருக்கும் என்பது குறித்து ட்விட்டர்வாசிகள் வேடிக்கையாகக் கேலி செய்தும் வருகின்றனர்.

மேலும் பார்க்க: ஜியோமி, சாம்சங், அமேசானை ‘ஹேக்’ செய்வதாக சவால்...! 1 கோடி ரூபாயை வென்ற இளைஞர்கள்
First published: November 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்