போலீஸ் காரில் நுழைந்து ஆவணங்களைத் தின்ற ஆடு

ஜார்ஜியாவில் உள்ள டக்ளஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தை சேர்ந்த துணை அதிகாரி ஒருவர் பணியில் இருந்த போது, தனது காரில் வைத்திருந்த கோப்புகளை ஒரு ஆடு சாப்பிடுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

போலீஸ் காரில் நுழைந்து ஆவணங்களைத் தின்ற ஆடு
ஆவணங்களைத் திண்ணும் ஆடு
  • News18 Tamil
  • Last Updated: September 7, 2020, 11:14 PM IST
  • Share this:
டக்ளஸ் கவுண்டி ஷெரிப்பின் அலுவலகத்தின் பேஸ்புக் பதிவில் வெளியான தகவலின்படி, துணை அதிகாரி சில சிவில் வழக்கு தொடர்பாக விசாரணை செய்யவேண்டிய ஆவணங்களுடன் ஒரு குடியிருப்புக்குச் சென்றிருந்தார். விசாரணை நிறைவடைந்து அவர் திரும்பி வந்தபோது ஒரு ஆடு அவரது காரில் ஏறி, அவருடைய முக்கியமான அனைத்து ஆவணங்களையும் கடித்து சாப்பிடுட்டு கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அவர் தினமும் ஏராளமான வீடுகளுக்கு சென்று ஆய்வு வேண்டியதன் காரணமாக தனது வாகனத்தின் கதவைத் திறந்து வைப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். ஏனெனில் பல சந்தர்ப்பங்களில் தீய நாய்களிடமிருந்து பின்வாங்க வேண்டியிருந்தது என்று ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தின் போது, போலீசார்கள் அந்த ஆட்டிடம் இருந்து தங்களது முக்கியமான ஆவணங்களை மீட்டெடுக்க முயற்சிக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அந்த ஆடு ஆவணங்களை  விட மறுக்கிறது. அப்பொழுது அவர்கள் அந்த ஆட்டை விரட்ட முயலும் போது, இரண்டு நாய்களும் அருகில் வந்து மேலும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.இச்சம்பவத்தில் வீடியோ பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்ட பின்பு நான்காயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும், கிட்டத்தட்ட நான்காயிரம் ஷேர்களையும் பெற்றுள்ளதால் தற்போது வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்து நூற்றுக்கணக்கான பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் நெட்டிசன்களில் ஒருவர், நகைச்சுவையாக பதிவிட்ட கருத்து, "எனக்கு எப்போதாவது என்னோட காகிதங்கள் கிடைத்தால் அந்த ஆடுகளில் ஒரு ஆடு தேவை" என்று கூறினார். மற்றொரு பயனர் "ஆடுகள் வெறும் காகிதங்களை மட்டும்தான் விரும்பும்" என்று எழுதியுள்ளார்.மேலும் ஒருவர் தனது வாரண்டை ஒரு ஆடு சாப்பிட்டதாகக் பதிவிட்டிருந்தார். அந்த பதிவை பார்த்த மற்றொருவர், இதுதான் எனது நாளில் நான் பார்த்த மிகச் சிறந்த விஷயம் என்று அவர் கூறினார். இதுகுறித்து பதிவிட்ட அந்த போலீசார் இனி என் வாழ்வில் எனது காரின் கதவை மட்டும் திறந்துவிட்டு எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதேபோல் ஒரு சம்பவத்தின் வீடியோ ஜூன் மாதத்தில் சமூக ஊடகங்களில் வெளிவந்தது.

ஒரு ஆடு தரையில் இருந்து குதித்து எருமையின் பின்புறத்தில் ஏரி உட்கார்ந்து உயரத்திலிருந்து இலைகளை உண்டு கொண்டிருந்தது. இச்சம்பவம் குறித்த வீடியோ கிளிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இந்திய வன சேவை அதிகாரி சுதா ராமன் அவர்கள், “அது ஒரு புத்திசாலி ஆடு” என்றும் "மரத்தின் இலைகளை சாப்பிட, எருமையை ஒரு ஏணியாகப் பயன்படுத்துவதன் மூலம் ஆடு தனது புத்திசாலித்தனத்தைக் காட்டியது" என்றும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
First published: September 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading