ஹோம் /நியூஸ் /உலகம் /

திடீரென்று முடக்கிய ஜிமெயில் சேவை - உலகம் முழுவதும் பயனர்கள் அவதி

திடீரென்று முடக்கிய ஜிமெயில் சேவை - உலகம் முழுவதும் பயனர்கள் அவதி

ஜிமெயில் சேவை

ஜிமெயில் சேவை

முக்கியத்துவம் வாய்ந்த ஜிமெயில் சேவைகள் நேற்று உலகம் முழுவதும் முடங்கியதால் லட்சக்கணக்கான பயனாளர்கள் பாதிப்பை கண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaWashingtonWashington

உலகில் பெரும்பாலான மக்கள் கூகுள் மற்றும் ஜிமெயில் சேவைகளை அன்றாடம் சார்ந்திருப்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. உலக அளவில் சுமார் 150 கோடிய பயனர்கள் ஜிமெயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஜிமெயில் சேவையானது செயலி வடிவிலும் கிடைக்கும் நிலையில், இந்தாண்டில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலியாக ஜிமெயில் உள்ளது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஜிமெயில் சேவைகள் நேற்று உலகம் முழுவதும் முடங்கியதால் லட்சக்கணக்கான பயனாளர்கள் பாதிப்பை கண்டனர். பல பயனாளர்களுக்கு மெயில் அனுப்புவதிலும், பலருக்கு பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டதால் சில மணிநேரம் தவித்து போனார்கள். முதலில் தங்கள் கணினி, செல்போனில் தான் ஏதோ கோளாறு போல என்று நினைத்த பயனர்கள் இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவிய போது கூகுள் சர்வரில்தான் கோளாறு என்று புரிந்து கொண்டு ஆசுவாசமடைந்தனர்.

#GmailDown என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. இந்நிலையில், கூகுள் நிறுவனமும் தங்கள் வொர்க் ஸ்பேசில் ஜிமெயில் டவுன் ஆனது உறுதி செய்தது. இதை உடனடியாக தீர்வு காணும் நடவடிக்கையை கூகுள் நிறுவனம் மேற்கொண்ட நிலையில், இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் சேவை இயல்பு நிலைமைக்கு கொண்டு வரப்பட்டது. பொதுவாக இன்ஸ்டாகிராம், ஷேர்சாட், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தள செயலிகள் தான் முடங்கும் என்ற நிலையில் ஜிமெயில் முடக்கம் கண்டது professional பயனர்களுக்கு தவிப்பை ஏற்படுத்தியது.

First published:

Tags: Google