Global Warming- கிழக்கு அண்டார்ட்டிகாவின் 1,200 சதுர கிமீ பனிப்பாறைகள் முற்றிலும் சரிந்தது
Global Warming- கிழக்கு அண்டார்ட்டிகாவின் 1,200 சதுர கிமீ பனிப்பாறைகள் முற்றிலும் சரிந்தது
அண்டார்டிகா
இயல்புக்கு விரோதமான வெப்ப நிலை அதிகரித்ததற்கு ஓரிரு வாரங்களுக்குப் பிறகு கிழக்கு அண்டார்டிகாவின் காங்கர் ஐஸ் ஷெல்ஃப் (1,200 சதுர கி.மீ.) முற்றிலும் சரிந்து, மற்ற பனிப்பாறைகளில் இரண்டு கூடுதலாக உடைந்து சரிந்ததும் ஒரே வாரத்தில் நிகழ்ந்தன.
"புவி வெப்பமடைதலின் இறுதி எல்லை" என்று அடிக்கடி குறிப்பிடப்படும் கிழக்கு அண்டார்டிகா மீண்டும் ஒருமுறை சூழலியல் அபாயத் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு கிழக்கு அண்டார்டிகாவின் வெப்பநிலை இயல்பை விட 50F முதல் 90F வரை உயர்ந்தது விஞ்ஞானிகளை கவலையடையச் செய்துள்ளது.
இயல்புக்கு விரோதமான வெப்ப நிலை அதிகரித்ததற்கு ஓரிரு வாரங்களுக்குப் பிறகு கிழக்கு அண்டார்டிகாவின் காங்கர் ஐஸ் ஷெல்ஃப் (1,200 சதுர கி.மீ.) முற்றிலும் சரிந்து, மற்ற பனிப்பாறைகளில் இரண்டு கூடுதலாக உடைந்து சரிந்ததும் ஒரே வாரத்தில் நிகழ்ந்தன.
மெல்போர்னில் உள்ள பிரேக்த்ரூ நேஷனல் சென்டர் ஃபார் க்ளைமேட் ரெஸ்டோரேஷன் ஆய்வாளர் டேவிட் ஸ்ப்ராட் கூறும்போது, ஆரம்பகால IPCC அறிக்கைகள் அண்டார்டிகா ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலையானதாக இருக்கும் என்று கூறியது. பின்னர், 2007 இல் ரிச்சர்ட் ஆலி இது ஏற்கெனவே பனிப்பாறை உருகிச் சரிவடைவது 100 ஆண்டுகள் காலக்கட்டம் முன்னிலையில் இருப்பதாக குண்டைத் தூக்கிப் போட்டார். அதாவது 100 ஆண்டுகளில் நிகழ வேண்டிய பனிப்பாறை உருகுதல் நிகழ்வு இப்போதே நிகழ்ந்து விட்டதாக அவர் கூறுகிறார்.
உண்மையில், அண்டார்டிகா காலநிலை மாதிரிகளை முதன்முதலில் முறியடித்து, முன்பு சில நூற்றாண்டுகள் என்ற மாதிரியை முறியடித்தது, பிறகு பத்தாண்டுகள் என்ற காலக்கட்ட மாதிரியையும் முறியடித்து அதற்கும் முன்னதான ஒரு உருகுதல் முறையைக் கொண்டுள்ளது. இதன் விளைவு என்ன என்று யாரும் கணிக்க முடியாது, என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு அண்டார்டிகா, அதன் மிகவும் பாதிக்கப்படக்கூடிய முதல் உறவினர்களான மேற்கு அண்டார்டிகா மற்றும் அண்டார்டிக் தீபகற்பத்திலிருந்து வேறுபடுகிறது, எப்போதும் திடமான, பாறை-திடமான 1 முதல் 3-மைல் தடிமனான பனிக்கட்டியானது அமெரிக்காவின் பரப்பளவைக் கொண்ட இந்தத் திடமான பனிப்பாறைகளானது உருகாது, அசையாது என்றெல்லாம் கூறினர், இப்போது இதுவும் உருகத் தொடங்கி அசையத் தொடங்கியுள்ளது.
மார்ச் 15 அல்லது அதற்கு அடுத்த நாள், கிழக்கு அண்டார்டிகாவின் காங்கர் ஐஸ் ஷெல்ஃப் முற்றிலும் சரிந்தது. இந்த சரிவு பருவகால விதிமுறைகளை விட 40C+ வெப்பமான பதிவான வெப்பநிலையைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது.
ஸ்கிரிப்ஸ் துருவ பிரதேச மையத்தின் பனிப்பாறையியல் ஆய்வாளர் ஹெலன் அமந்தா பிரிக்கர் மார்ச்சில் மூன்று பனிப்பாறை சரிவு நிகழ்ச்சிகளை கூறினார், 1. காங்கர் ஐஸ் ஷெல்ஃப். 2. கிளென்சர் ஐஸ் ஷெல்ஃப், இன்னொன்று மிகப்பெரிய டாட்டன் பனிப்பாறையில் நிகழ்ந்த சிறிய சரிவு என்கிறார். இதனால் நூற்றாண்டின் நடுப்பகுதியில், கடல் மட்டம் ஒன்றிரண்டு அடி உயரும் என்று கூறப்படுகிறது.
பேராசிரிய ஆய்வாளர் மேட் கிங் கூறும்போது, “இதை விடவும் பெரிய, பாரிய பனிப்பாறைகள், பரப்புகள் உடைவதைக் காண்போம். உலகளாவிய கடல் மட்டத்தை தீவிரமாக உயர்த்த போதுமானது... காங்கர் பனிப்பாறை பரப்பின் உடைவின் வேகம், விஷயங்கள் விரைவாக மாறக்கூடும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது… நமது கார்பன் உமிழ்வுகள் அண்டார்டிகாவில் தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் அண்டார்டிகாவின் இந்தத் தாக்கம் உலகின் மற்ற கடற்கரைப் பகுதிகளை பாதிக்கும், அது நாம் நினைப்பதை விட வேகமாக நடக்கலாம்.” என்று எச்சரிக்கிறார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.