• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • Global Warming | கடும் வறட்சிகள் ஏற்படும் அபாயம்; புவி வெப்பமடைதலால் பூமியின் நீர் சுழற்சியில் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை

Global Warming | கடும் வறட்சிகள் ஏற்படும் அபாயம்; புவி வெப்பமடைதலால் பூமியின் நீர் சுழற்சியில் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை

வறட்சி- மாதிரிப்படம்.

வறட்சி- மாதிரிப்படம்.

உலகில் பூமி அதிவேகமாக வெப்பமடைந்து வருவதால் பூமியின் நீர் சுழற்சியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதனால் வறட்சிகள் அதிகம் உண்டாகும் என்று புதிய சுற்றுச்சூழலியல் ஆய்வு ஒன்று குண்டைத் தூக்கிப்போட்டுள்ளது.

  • Share this:
    நீர் சுழற்சி என்பது ஒரு இயற்கை விவகாரம். இந்த நடவடிக்கை மூலம்தான் தாவரங்கள், நிலத்தின் மேற்பரப்பு ஈரப்பதத்தை காற்றில் வெளியிடுகிறது. இந்நிலையில் 17 ஆண்டுகளாக இதில் ஆராய்சி மேற்கொண்ட ஆய்வாளர்கள் புவியீர்ப்பு சக்தியைக் கொண்டு ஆராய்ந்துள்ளார்கள். இதில் அதிவேகமாக பூமி வெப்பமடைந்து வருவதால் நீர் சுழற்சியில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    "evapotranspiration", என்று வழங்கப்படும் இயற்கை நிகழ்வு ஒன்றைப் பற்றிய இந்த ஆய்வில் 2003 முதல் 2019 வரை புவி வெப்பமடைதல் நடவடிக்கை 10% அதிகரித்துள்ளது தெரியவந்தது. கடல்களுக்கும் கண்டங்களுக்கும் இடையிலான நீராதார சுழற்சி ஆய்வுகளில் இந்த புவி வெப்படமடைதலின் துரித கதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

    இவாபோட்ரான்ஸ்பிரேஷன் என்பது வான்வெளியில் இழக்கப்படும் நீரின் அளவு பற்றியது. ஒன்று நிலத்தின் மேற்பரப்பில் இருக்கும் ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள், கால்வாய்கள், கிணறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் ஆவியாவது, மற்றொன்று வாழும் தாவரங்களிலிருந்து இழக்கப்படும் ஈரப்பதம் ஆகும். இது நாட்டுக்கு நாடு வேறு படும் தன்மை கொண்டது வெப்ப நாடுகளில் இதனால் நீர் சுழற்சி பாதிக்கப்பட்டு கடும் வறட்சிகள் தோன்றும் அபாயம் உள்ளது.

    இந்த ஆய்வை நடத்தியவர் பாஸ்கலோனி-கேம்பெல், இந்த முடிவுகள் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளன.

    நீர் சுழற்சி என்பது நீர் வெயிலில் ஆவியாகும் போது நீராவியிலிருந்து வெளியாகும் ஈரப்பதம் பற்றியதாகும். இதுதான் மழையாக வருகிறது. இப்போது நீர் சுழற்சியில் குளோபல் வார்மிங்கினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நிலம் வறண்டு போகும் அபாயம் உள்ளது. புல் பூண்டுகள் முளைப்பதும் சிக்கலுக்குள்ளாகும். இதனால் சில பகுதிகளில் மேலதிக வறட்சிகள் தோன்றும். இது மானுட இருப்புக்கே சவால் ஏற்படுத்தும்.

    உருகும் பனிச்சிகரங்கள், துருவப்பகுதிகளில் உருகும் பனிப்பாறைகள், ஆகியவை அதிகரித்து வருவது புவி வெப்பமடைதல் விளைவை அபாயகரமாக்கியுள்ளது. இதோடு கண்ணுக்குப் புலப்படாத பூமியின் நீராதார சுழற்சியிலும் கடும் மாற்றங்கள், பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அதாவது நிலத்திலிருந்து ஆவியாகும் நீர் மீண்டும் மழையாகப் பொழியாத நிலை கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிறது என்று எச்சரிக்கிறது இந்த ஆய்வு.

    மேலும் இந்த இவாபோட்ரான்ஸ்பிரேஷன் என்பதனால், உருவாக பல யுகங்கள் எடுத்துக் கொண்ட நிலத்தடி நீராதாரமும் குறையத் தொடங்கும் என்கிறது இந்த ஆய்வு.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: