Global Hunger Index எனப்படும் உலகளாவிய பசி குறியீடு என்பது, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை எடை, குழந்தை வளர்ச்சி மற்றும் குழந்தை இறப்பு ஆகிய நான்கு காரணிகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலகளாவிய பசி குறியீட்டை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 116 நாடுகளின் பட்டியலில் இந்தியா 101-வது இடத்தைப் பிடித்துள்ளது.
பட்டினி கொடூரம் மிக அதிகமாக உள்ள 31 நாடுகளின் பட்டியலிலும் இந்தியா இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், 107 நாடுகளில் இந்தியாவுக்கு 94-வது இடம் கிடைத்தது. ஒரே ஆண்டில் 7 இடங்கள் சரிந்துள்ளதால், கோடிக்கணக்கான மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.
இந்தியாவை விட 15 நாடுகள் மட்டுமே உலகளாவிய பசி குறியீட்டில் மோசமான இடத்தைப் பிடித்துள்ளன. சோமாலியா, ஏமன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், காங்கோ ஜனநாயக குடியரசு. மடகாஸ்கர், லைபீரியா, ஹைட்டி, தைமூர் லெஸ்டி, சியாரா லியோன், மோசாம்பிக், காங்கோ, நைஜீரியா, ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகள் மட்டுமே இந்தியாவை விட பின்தங்கியுள்ளன. உலக அளவில் சோமாலியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. அங்கு பட்டினி குறியீடு 50 புள்ளி 8- ஆக உள்ளது. இது மிகவும் ஆபத்தானது என கணக்கிடப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேச நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. பாகிஸ்தான் 92-வது இடத்திலும் நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகியவை 76-வது இடத்திலும் உள்ளன.
2000-மாவது ஆண்டை விட தற்போது பட்டினி குறையீடு குறைந்திருந்தாலும், முன்னேற்றம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் பட்டினியை ஒழிக்க வேண்டும் என்ற ஐ.நா.,வின் இலக்கு எட்டப்படாது என்றும், இதற்கு பருவநிலை மாற்றம், உள்நாட்டுப் போர் மற்றும் கொரோனா தொற்று பரவல் ஆகியவை காரணம் என்றும் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hunger Dead, India, Nepal