மசூத் அசாரை ஐநாவின் தீவிரவாதிகள் பட்டியலில் வைக்க சர்வதேச நாடுகள் கோரிக்கை!

குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் உள்ளிட்ட முக்கிய பயங்கரவாத தளபதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிகிறது.

மசூத் அசாரை ஐநாவின் தீவிரவாதிகள் பட்டியலில் வைக்க சர்வதேச நாடுகள் கோரிக்கை!
மசூத் அசார்
  • News18
  • Last Updated: February 28, 2019, 9:53 AM IST
  • Share this:
புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை, ஐநாவின் தீவிரவாதிகள் பட்டியலில் வைக்க அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை ஊடுருவிய இந்திய விமானப்படை வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், பயங்கவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் உள்ளிட்ட முக்கிய பயங்கரவாத தளபதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிகிறது.


இந்த நிலையில், பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐ.நா-வின் கருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

மேலும் மசூத் அசார் வெளிநாடு செல்ல தடை விதிக்கவும், அவரது வங்கிக் கணக்குகளை முடக்கவும் பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு முறை இதற்கான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபோது, சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் அதனை தடுத்துவிட்டது.

ஆனால், இந்த முறை சர்வதேச அழுத்தம் காரணமாக சீனா தடுக்காது என்று கூறப்படுகிறது.Also See...

First published: February 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading