பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சர்வதேச கீதம்...“The Rapist is You!”

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் இப்பாடல் இன்று சர்வதேச கீதம் ஆக வலுப்பெற்றுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சர்வதேச கீதம்...“The Rapist is You!”
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: December 7, 2019, 3:03 PM IST
  • Share this:
பாலியல் வன்கொடுமை என்னும் பிரச்னை இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான பெரும் அநீதியாக நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

தேசிய குற்றவியல் தகவமைப்பின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் சுமார் 32,500 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரையில் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகளிள் நாட்டிலேயே 1,83,000 வழக்குகள் மட்டுமே நிறைவு செய்யப்பட்டுள்ளன. மற்றபடி 12,78,000 வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையிலேயே உள்ளன.

சமீபத்தில் இந்தியாவில் ஹைதரபாத் மற்றும் உன்னாவ் வன்கொடுமை நிகழ்வுகள் நாட்டையே உலுக்கி உள்ளன. இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் இதே பிரச்னைதான். தென் அமெரிக்க நாடான சிலி நாட்டில் உள்ள ஒரு பெண்ணியம் பேசும் குழுவினரால் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் போராட்டத்தில் “The Rapist is You!” என்னும் போராட்டப் பாடல் பாடப்பட்டது.


பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் இப்பாடல் இன்று சர்வதேச கீதம் ஆக வலுப்பெற்றுள்ளது. நவமப்ர் 20-ம் தேதி முதன்முதலாக இசைக்கப்பட்ட இப்பாடல் இன்று சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளது.

இதுவே, பெண்களுக்கு எதிரான அநீதிகள் மட்டும் இவ்வுலகில் எந்த நாடாக இருந்தாலும் பொதுவாக இருக்கும் ஒரு விஷயமாகி உள்ளது என்பதைக் காட்டுவதாக பெண் அமைப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும் பார்க்க: இந்தியர்கள் சூட்கேஸ்களாக இருந்திருக்கலாம்... சூட்கேஸ்களைப் பாராட்டும் ட்விட்டர்..!
First published: December 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading