உலகின் மிகப்பெரிய மீன் பெண் திமிங்கல சுறாக்கள்தான் - 10 ஆண்டு ஆய்வில் வெளியான சுவாரசிய தகவல்

ஆழ்கடலில் வாழும் உயிரினத்தில் உலகின் மிகப்பெரியவை பெண் திமிங்கல சுறாக்கள் தான் என ஆராய்ச்சியில் தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய மீன் பெண் திமிங்கல சுறாக்கள்தான் - 10 ஆண்டு ஆய்வில் வெளியான சுவாரசிய தகவல்
மாதிரிப் படம்
  • News18 Tamil
  • Last Updated: September 21, 2020, 9:07 PM IST
  • Share this:
பூமியின் மிகப்பெரிய மீன்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு சுவாரஸ்யமான தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடலுக்கடியில் வாழும் ஆண் மற்றும் பெண் திமிங்கல சுறாக்கள், வடிகட்டி உணவளிக்கும் கடல் பெஹிமோத் ஆகியவை வெவ்வேறு விகிதங்களில் வளரும் தன்மை கொண்டது. அதில் குறிப்பாக பெண் வகை மிகவும் மெதுவாக வளருமாம். ஆனால் ஆண் வகை மீன்களை காட்டிலும் மிகப்பெரிதாக வளரும் என கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, "ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையிலிருந்து பரந்த நிங்கலூ ரீஃப் பகுதியில் கடந்த 10 ஆண்டு காலமாக சுமார் 54 திமிங்கல சுறாக்களின் வளர்ச்சியை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கடல் பகுதியில் மெதுவாக நீந்தும் ஆபத்தான மீன்கள் நூற்றுக்கணக்கில் ஆண்டுதோறும் இடம்பெயர்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக ஆண், பெண் வகை திமிங்கல சுறாக்கள் தங்களது இளம் வயதில் வேகமாக வளர்ந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இவை ஆண்டுக்கு சுமார் 8-12 அங்குலங்கள் (20-30 செ.மீ) வளர்கிறது. குறிப்பாக, ஆண்கள் வகை பெண்களை விட சற்று விரைவாக வளர்வதும் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 30 வயதில் பாலியல் முதிர்ச்சியை அடைந்த ஆண் வகை திமிங்கல சுறாக்கள் 26 அடி (8 மீட்டர்) நீளம் வளர்கிறது.

அதுவே பெண்கள் வகை 50 வயதில் பாலியல் முதிர்ச்சியை அடையும் போது சுமார் 14 மீட்டர் (46 அடி) நீளம் வளர்ந்து காணப்படுகிறது. இதிலிருந்து, திமிங்கல சுறாக்கள் 100-150 ஆண்டுகள் வாழக்கூடும் என்பது ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. மேலும், மிக நீண்ட காலமாக அறியப்பட்ட "திமிங்கல சுறா சுமார் 60 அடியை (18 மீட்டர்) எட்டியுள்ளதாக" ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


பெண் திமிங்கல சுறாக்கள் மிகப்பெரியதாக இருப்பதற்கு முக்கிய காரணம், ஒரே சமயத்தில் தன் கருவில் சுமார் 300 குட்டி சுறாக்களை சுமக்கும் தன்மை கொண்டது. இதனாலேயே, உலகின் மிகப்பெரிய சுறாக்கள் பெண்களாக விளங்குவதாக ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய ஆஸ்திரேலிய கடல் அறிவியல் மற்றும் கடல் உயிரியலாளர் மார்க் மீக்கன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, இந்த சுறாக்கள் பின்புறத்தில் பழுப்பு-சாம்பல் நிறத்தையும், இரு பக்கவாட்டில் வெள்ளை புள்ளிகளையும், அடிபகுதியில் வெள்ளை நிறத்தையும் கொண்டுள்ளன. குறிப்பாக ஆண் மற்றும் பெண் திமிங்கல சுறாக்கள் வெவ்வேறு விகிதத்தில் வளர்கின்றன என்பதற்கான முதல் ஆதாரத்தை இந்த ஆய்வு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கரை ஒதுங்கிய இறந்த சுறாக்களின் முதுகெலும்புகளிலிருந்து அதன் வளர்ச்சி மற்றும் வயது மதிப்பீடுகளை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டனர். ஆனால் 10 ஆண்டு கால ஆய்வில் திமிங்கல சுறாக்கள் வாழ்வியலை ஆதாரத்துடன் எங்கள் ஆராய்ச்சி கணக்கிட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் சுறாக்கள் பாதுகாப்பட வேண்டும் என்றும் அவைகள் வேட்டையாடப்படுதலை தவிர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.
First published: September 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading