• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • செல்போனால் ரயில் மோதி மாணவி உயிரிழப்பு... காப்பாற்றச் சென்ற மாணவரும் இறந்த சோகம்!

செல்போனால் ரயில் மோதி மாணவி உயிரிழப்பு... காப்பாற்றச் சென்ற மாணவரும் இறந்த சோகம்!

கோப்புப்படம்

கோப்புப்படம்

தன்னுடன் வந்த மாணவியை தண்டவாளத்தில் இருந்து தள்ளிவிட்டு, முன்னாள் சென்ற மாணவியை காப்பாற்றச் சென்றுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    செல்போன் பயன்படுத்தியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற மாணவி ரயில் மோதி பலியான நிலையில், அவரை காப்பாற்றச் சென்ற மாணவரும் உயிரிழந்துள்ள சோக சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது.

    இலங்கையின் கண்டி மாவட்டத்தில் உள்ள நாவலப்பிட்டி பிரதேசத்தில் பியூமி பாக்யா செவ்வந்தி என்ற 15 வயது மாணவி நேற்று செல்போன் பயன்படுத்தியபடி, தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார். அவருக்கு பின்னால், 16 வயதான ஹர்ஷ குமார எனும் மாணவர், மற்றொரு மாணவியுடன் நடந்து சென்றுள்ளார்.

    அப்போது, கொழும்பில் இருந்து பதுளைக்கு சென்ற ரயில் வந்துள்ளது. இதனை கவனித்த மாணவர், தன்னுடன் வந்த மாணவியை தண்டவாளத்தில் இருந்து தள்ளிவிட்டு, முன்னாள் சென்ற மாணவியை காப்பாற்றச் சென்றுள்ளார்.

    ஆனால், எதிர்பாராத விதமாக ரயில் இருவர் மீதும் வேகமாக மோதியது. இந்த சம்பவத்தில் இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Read Also... Fact Check: பாக். ராணுவ வீரர்களுடன் நடனம் ஆடினாரா அபிநந்தன்?

    Also See...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: