• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பீர் இலவசம்: எந்த நாட்டில் தெரியுமா?

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பீர் இலவசம்: எந்த நாட்டில் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொரோனாவில் தீவிரத்தை குறைக்க பொதுமக்களுக்கு முழு அளவில் தடுப்பூசியை செலுத்த பல்வேறு அரசுகளும் முயன்று வருகின்றன. ஒரு சில அரசுகள், தடுப்பூசி செலுத்துக்கொள்வோருக்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.

  • Share this:
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்துக்கொள்வதை ஊக்கப்படுத்த பல்வேறு நாட்டு அரசுகளும் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. சில நாடுகள் தடுப்பூசி செலுத்திகொள்பவர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டங்களையும் அறிவித்து வருகின்றன.

கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  தற்போது தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்குள் பதிவாகி வந்தாலும் முதல் அலையின்போது கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது 55 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர்.  6 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

தற்போது அங்கு தொற்று  குறைந்துள்ளதற்கு மற்றொரு காரணம் தடுப்பூசி ஆகும். ஏராளமானோர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை மேலும் அதிகரிக்கும் விதமாக அந்நாட்டு அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. அமெரிக்காவின் தற்போது ஜான்சன்& ஜான்சன் தயரித்த தடுப்பூசி,  மாடர்னா, ஃபைசர் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
அமெரிக்காவில் இதுவரை 16 கோடியே 87 லட்சம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 13 கோடியே 61 லட்சம் பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போதுவரை 60 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்திகொண்டுள்ளனர்.  அந்நாட்டு சுதந்திர தினமான ஜூலை 4ம் தேதிக்குள் இதனை 70 சதவீதமாக அதிகரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு முயன்று வருகிறது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில்,  தனியார் பீர் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து அந்நாட்டு அரசு புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது. இது தொடர்பாக பேசிய அதிபர் ஜோ பைடன், தடுப்பூசி செலுத்துக்கொள்ளும் நபர்களுக்கு இலவசமாக பீர் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

வெஸ்ட் வெர்ஜினியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு லாட்டரி குலுக்கலில்  துப்பாக்கி போன்றவை பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சில மாகாணங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் வரை குலுக்கலில் பரிசாக வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.அதேபோல்  தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்ள 4 முன்னணி குழந்தைகள் பராமரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளன.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: