முகப்பு /செய்தி /உலகம் / ஜெர்மனியில் 2ம் உலகப் போரின்போது வீசப்பட்ட குண்டு வெடித்தது: 4 பேர் காயம்

ஜெர்மனியில் 2ம் உலகப் போரின்போது வீசப்பட்ட குண்டு வெடித்தது: 4 பேர் காயம்

2ம் உலக வெடிகுண்டு வெடித்தது

2ம் உலக வெடிகுண்டு வெடித்தது

உலக போர் முடிந்து 76 ஆண்டுகள் கடந்தும் தற்போதும் ஜெர்மனியில் வெடிக்காத வெடிகுண்டுகள் அவ்வபோது கண்டறியப்பட்டு வருகின்றன. அங்கு, ஆண்டொன்றுக்கு 2000 டன் இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன.

  • 1-MIN READ
  • Last Updated :

ஜெர்மனியின்  முனிச் நகரில் ரயில் நிலையம் ஒன்றில் தோண்டுதல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2ம் உலகப் போரின் போது வீசப்பட்ட குண்டு வெடித்தது. இதில் 4 பேர் காயமடைந்தனர்.

ஜெர்மனியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான முனிச் நகரில் டோனர்ஸ்பெர்கர்ப்ரூக்(Donnersbergerbrücke) ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கு தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ரயில் நிலையம் அருகே, துளையிடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2ம் உலகக் போரின்போது வீசப்பட்ட வெடிக்காத குண்டு ஒன்று திடீரென வெடித்து சிதறியது.

இதில், 4 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. விபத்து நடைபெற்ற பகுதியை போலீசார் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. பவேரியாவின் மாநில உள்துறை அமைச்சர், வெடிகுண்டு தோராயமாக 550 பவுண்டுகள் எடை இருக்கும்  என்று கூறினார்.

உலக போர் முடிந்து 76 ஆண்டுகள் கடந்தும் தற்போதும் ஜெர்மனியில் வெடிக்காத வெடிகுண்டுகள் அவ்வபோது கண்டறியப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை கட்டுமானப் பணியின்போது கண்டறியப்படுகின்றன. ஜெர்மனியில் ஆண்டொன்றுக்கு 2000 டன் இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: குடியரசு நாடாக மலர்ந்த பிரிட்டன் ஆளுகையின் கீழ் இருந்த பார்படாஸ் தீவு

ஜெர்மனியில்  கட்டுமான வேலையை தொடங்கும் முன், கட்டுமான தளங்களில் வெடிக்காத வெடிகுண்டுகள் இல்லை என சான்றளிக்கப்பட வேண்டும். வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டால்,  சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் அப்புறப்படுத்தப்படுகின்றனர். பின்னர், அவை செயலிழக்கச் செய்யப்படுகின்றன.

மேலும் படிங்க: பிரசவ வலியோடு மருத்துவமனைக்கு சைக்கிளை ஒட்டி சென்று குழந்தையை பெற்றெடுத்த பெண் எம்பி!

First published:

Tags: Germany, Second world war