முகப்பு /செய்தி /உலகம் / ஆணுறையில் ஓட்டை போட்ட காதலி.. வொர்க் அவுட் ஆகாத ப்ளான் - தண்டனை வாங்கி கொடுத்த காதலன்

ஆணுறையில் ஓட்டை போட்ட காதலி.. வொர்க் அவுட் ஆகாத ப்ளான் - தண்டனை வாங்கி கொடுத்த காதலன்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தனது காதலனுக்கு தெரியாமல் கர்ப்பமடைய வேண்டும் என திட்டமிட்டு ஆணுறையில் ஓட்டை போட்ட காதலிக்கு ஆறு மாதம் சிறை தண்டனை கிடைத்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

ஜெர்மனி நாட்டில் பெண் ஒருவர் தன்னுடன் உறவில் இருந்த நபரின் ஆணுறையில் அவருக்கு தெரியாமல் ஓட்டை போட்ட குற்றத்திற்காக தண்டனை பெற்றுள்ள விநோத சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் 42 வயது ஆணுடன் பிரெண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ்(Friends with benefits) ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். இருவருக்கும் ஆன்லைன் மூலம் அறிமுகம் ஏற்பட்டு, கேஸ்சுவல் ரிலேஷன்சிப்பாக இருந்தது பின்னர் பாலியல் உறவாக அது பரிணமித்துள்ளது.

ஆனால் இதை கமிட்டெட் ரிலேஷன்சிப்பாக கொண்டு செல்ல ஆரம்பத்தில் இருவரும் முடிவெடுத்துள்ளனர். காலப்போக்கில் அந்த 39 வயது பெண்ணுக்கு அந்த ஆண் மீது ஆழமான உணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, இதை கமிட்டெட் ரிலேஷன்சிப்பாக மாற்ற திட்டமிட்ட அவர், இருவரும் உறவு கொள்ளவதற்கு முன்பாக அந்த நபரின் ஆணுறையில், அவருக்கு தெரியாமல் ஓட்டை போட்டுள்ளார். உறவினால் தான் கர்ப்பம் அடைந்து விடலாம் என திட்டமிட்ட நிலையில், அந்த பெண்ணின் திட்டம் வொர்க் அவுட் ஆகவில்லை.

கர்ப்பமடையாவிட்டாலும், தனது காதலனை ஏமாற்ற திட்டமிட்ட அந்த பெண், வாட்ஸ் ஆப் மெசேஜ் மூலம் நான் உங்கள் ஆணுறையில் ஓட்டை போட்டுவிட்டேன் அதனால் தற்போது கர்ப்பமாக உள்ளேன் என பொய் கூறியுள்ளார்.

அந்த பெண்ணின் மெசேஜை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்நபர் பெண் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். இந்த விசித்தரமான வழக்கை எவ்வாறு அனுகுவது என ஜெர்மனி நீதிமன்றத்திற்கு பிடிபடவில்லை. அந்த 39 வயது பெண்ணுக்கு எந்த பிரிவின் கீழ் குற்றம் சுமத்துவது என திணறிய நீதிமன்றம் தனது காதலனை ஏமாற்றும் விதமாக திருட்டுத்தனமான செயலை புரிந்து குற்றத்திற்காக ஆறு மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இதையும் படிங்க: பொதுமக்களை துன்புறுத்தி வலுக்கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யும் சீனா! வைரலாகும் வீடியோ

இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு, பொதுவாக ஆண்கள் இதுபோல பெண்களை ஏமாற்றுவதாக வழக்குகள் வரும் நிலையில், தற்போது அரிதாக பெண் ஒருவர் இந்த செயலில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது என தீர்ப்பு வழங்கிய நீதிபதி அஸ்ட்ரிட் சலேவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Condom, Germany, Sex Relation