ஜெர்மனில் கடுமையான பனிப்பொழிவு.. வீடற்ற மக்கள் தங்குவதற்கு உருவாக்கப்படும் ’உல்மர் நெஸ்ட்’ குடில்கள்..

Snow

ஜெர்மன் நகரத்தில் தற்போது கடுமையான பனிப்பொழிவு உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் வீடற்ற மக்கள் தூங்குவதற்காக பாதுகாப்பான குடில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

  • Share this:
ஜெர்மன் நகரத்தில் தற்போது கடுமையான பனிப்பொழிவு உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் வீடற்ற மக்கள் தூங்குவதற்காக பாதுகாப்பான குடில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்தியின் படி, 'உல்மர் நெஸ்ட்' என்று அழைக்கப்படும் சிறிய வீடுகள் ஜனவரி 8-ஆம் தேதி முதல் உல்மில் உள்ள அதிகாரிகளால் நிறுவப்பட்டு வருகிறது. முனிச்சிலிருந்து மேற்கே 75 மைல் தொலைவில் உள்ள உல்ம் நகரத்தில் இந்த 'உல்மர் நெஸ்ட்' அமைக்கப்பட்டு வருகிறது.  மரம் மற்றும் எஃகு ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்ட இந்த குடில்கள் பூங்காக்கள் மற்றும் பிற பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. வீடற்றவர்களை காற்று மற்றும் குளிரில் இருந்து பாதுகாக்க, படுக்கைகள் வெப்ப காப்புடன் பொருத்தப்பட்டுள்ளன. அவை இரண்டு நபர்களின் பயன்பாட்டிற்கு போதுமானவை. 

இந்த குடில்களில் கேமராக்கள் எதுவும் இல்லை, அவை பயன்பாட்டில் இருக்கும்போது, சென்சார்கள் அறிவிப்பு செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த கட்டுமான பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், “சில தாமதங்களுக்கு பிறகு, வானிலை மோசமான நிலைக்கு திரும்பத் தொடங்கியபோதே இந்த குடில்களை உருவாக்கிவிட்டோம். துரதிர்ஷ்டவசமாக கொரோனா காரணமாக தாமதமாக இத்திட்டம் தொடங்கப்பட்டாலும், தற்போதைய மிகவும் குளிர்ந்த இரவுகளில் வீடற்றவர்களுக்கு இந்த நெஸ்ட் உபயோகமாக இருக்கிறது என தெரிவித்தனர். 

நாங்கள் இந்த நெஸ்டிற்குள் வெப்ப காப்பு அம்சத்தை மேம்படுத்தினோம். சோலார் பேனல்கள் உதவுடன் காலநிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்ததால் குறைந்த ஈரப்பதம் மற்றும் வெப்பமான காற்று இரண்டையும் மக்கள் உணரலாம். இப்போது சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பகலில் ஆற்றலை நடுநிலையாக பயன்படுத்த   அனுமதிக்கிறது. 

உல்மர் நெஸ்ட்  வயர்லெஸ் நெட்வொர்க்குடனும் இணைக்கப்பட்டுள்ளன, இதனால் இவை மொபைல் நெட்வொர்க்குகளை சார்ந்து இருக்காது, இதனால் அவை பயன்படுத்த மிகவும் எளிதானவை என்றும் இந்த நெஸ்ட்களை பயன்படுத்த மக்கள் எந்த ஆவணங்களும் நிரப்பி பதிவுசெய்ய வேண்டிய அவசியம் இல்லை என உல்மர் நெஸ்ட் திட்டத்தின் இயக்குனர் ஃபிளாக்கோ ப்ராஸ் தெரிவித்துள்ளார். இந்த அறையின் கதவுகளை மூட, திறக்க சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டால் இந்த திட்டத்தை தொடங்கியவர்களே சரி பார்த்து, மீண்டும் பயன்படுத்த தயார் செய்து கொடுத்து விடுகின்றனர். இரவில் குளிரில் வீடு இல்லாமல் யாரும் தவிக்கக்கூடாது என்பதே எங்கள் குறிக்கோள் என ஃபிளாக்கோ ப்ராஸ் கூறுகிறார்.
Published by:Ram Sankar
First published: