முழு ஊரடங்கை பிப்ரவரி 14 வரை நீட்டித்தது ஜெர்மனி

முழு ஊரடங்கை பிப்ரவரி 14 வரை நீட்டித்தது ஜெர்மனி

ஏஞ்சலா மெர்கல்

ஜெர்மனியில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

 • Share this:
  உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு பிப்ரவரி 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

  கொரோனா வைரசால் அதிக பாதிப்பை சந்தித்த ஐரோப்பிய நாடுகளுள் ஒன்று ஜெர்மனி. அங்கு கொரோனா வைரசின் அடுத்த அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

  அங்கே 20 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக நடைமுறை படுத்த அந்நாட்டு அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது.

  மேலும் படிக்க... அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்

  ஜெர்மனியில், புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் ஜெர்மனியில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.

  இந்நிலையில், முழு ஊரடங்கு பிப்ரவரி 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த முழு ஊரடங்கை தீவிரமாக நடைமுறைபடுத்தவும் முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

  இதற்கிடையில், உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்திருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: