எங்களுக்கான ஆர்டர் செய்யப்பட்ட முகக்கவசங்களை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது - ஜெர்மனி குற்றச்சாட்டு

எங்களுக்கான ஆர்டர் செய்யப்பட்ட முகக்கவசங்களை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது - ஜெர்மனி குற்றச்சாட்டு
கோப்புப் படம்
  • Share this:
ஜெர்மன் காவல்துறைக்காக ஆர்டர் செய்யப்பட்ட முக கவசங்களை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளதாக ஜெர்மனி குற்றம் சாட்டியுள்ளது.

கொரோனா தாக்குதல் அமெரிக்காவில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் அங்கு மருத்துவப் பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்நாட்டில் மருத்துவப் பொருட்களுக்கு தேவை அதிகரித்திருப்பதால் பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை பிறப்பித்திருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் 2 லட்சம், என் 95 முக கவசங்கள், 1,30,000 அறுவை சிகிச்சை முக கவசங்கள் மற்றும் 6 லட்சம் கையுறைகளை அமெரிக்க அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அவை எங்கிருந்து கைப்பற்றப்பட்டவை என அவர் தெரிவிக்கவில்லை.


இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 3எம் நிறுவனத்திடம் ஜெர்மன் காவல்துறைக்காக ஆர்டர் செய்யப்பட்டிருந்த முக கவசங்கள் பாங்காக் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஜெர்மன் இதனை நவீன திருட்டு என்று விமர்சித்துள்ளது. தங்களை விட மூன்று மடங்கு அதிக விலை கொடுப்பதாகக் கூறி மருத்துவப் பொருட்களை அமெரிக்கா வாங்குவதாக ஃபிரான்ஸும் அமெரிக்கா மீது புகார் கூறியுள்ளது.

Also see...
First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading